Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம ஜெயிச்சிட்டோம் மாறா!! வெற்றிக்களிப்பில் பெசன்ட் ரவி..வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று மெச்சும் வகையில் சர்வைவர் கலக்கி வருகிறது.
வெறித்தனமான போட்டிகளை சர்வசாதாரணமாக கடந்து வரும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார்கள்

எவ்வளவுதான் நாங்க சண்டை போட்டுக்கொண்டு புகைச்சலோடு இருந்தாலும் போட்டியின்னு வந்ததும் ஒற்றுமையாக கலக்கிய வேடர்கள் டீமுக்கு வாழ்த்துக்கள் குவியுது.

நெருப்பு ரொம்ப அவசியம் தான்

நெருப்பு ரொம்ப அவசியம் தான்

சர்வைவர் நிகழ்ச்சிக்கு நான்காவது நாளில் சாதித்துக் காட்டிய வேடர்கள் தங்களுடைய சாப்பாடை பெற்ற மகிழ்ச்சியில் குதூகலித்து வருகின்றனர். மூன்று நாட்களாக சாப்பாடு சாப்பிடாமல் கிடைக்கும் பழங்களும், கிழங்குகளும், இளநீரையும் மட்டுமே பங்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நெருப்பு கிடைத்தது பெரிய பொக்கிஷமாக தான் இருந்திருக்கிறது. அதை அவர்களுடைய முகத்தில் எக்ஸ்பிரஸனையும் ஆனந்தத்தையும் பார்த்தே அனைவரும் புரிந்துகொண்டனர். அருகில் இருக்கும் போது ஒரு பொருளோட அருமை தெரியாது அது இல்லாத போது தான் அது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரிகிறது. அது போலத்தான் தற்போது நெருப்பின் அவசியத்தை போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அதனை பார்த்து கொண்டிருப்பவர்களும் புரிந்து கொண்டனர்.

யாரும் சளைத்தவர்கள் அல்ல

யாரும் சளைத்தவர்கள் அல்ல

ஜீ தமிழில் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் ரசிகர்களாக மாறிவிட்டனர். இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் இரண்டு டீம் காடர்கள் வேடர்கள் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்று அனைவரும் சொல்லும் வண்ணம் தான் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் வேடர்கள் டீமில் லட்சுமி பிரியா, அம்ஜத் கான், நந்தா, லக்கி நாராயணன், பெசன்ட் ரவி, ஐஸ்வர்யா விஜே பார்வதி ஆகியோர் இருக்கின்றனர். காடர்கள் டீமில் விக்ராந்த், சரண், ராம். சி, இந்திரஜா சங்கர், லேடி கேஷ், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா ஆகியோர் இருக்கின்றனர்.

உள்ளே புகைச்சல் வெளியே ஒற்றுமை

உள்ளே புகைச்சல் வெளியே ஒற்றுமை

முதல் நான் டாஸ்கில் வென்ற வேடர்கள் டீம் நல்ல தீவுகளிலும் காடர்கள் டீம் சுமாரான தீவுகளிலும் இருந்து வருகிறது. ஆனால் காடர்களிடம் நெருப்பு இருப்பதால் அவர்கள் கிடைக்கும் பொருட்களை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். வேடர்கள் டீம் இயற்கை பொருள்களை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு வருகிறது. அவர்களிடம் நெருப்பு இல்லாததால் நெருப்பை உண்டு பண்ண எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியில் முடிந்து கொண்டிருக்கிறது. இதனால் பலரும் சேர்ந்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் டீமில் அடிக்கடி புகைச்சலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் குறைக் கூறிக் கொண்டு அடிக்கடி பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவு படுத்தி விடுகிறார்கள். ஆனால் என்னதான் நாங்க சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் போட்டியின்னு வந்து விட்டால் கொடி கட்டி விடுவோம் என்று தற்போது நிரூபித்து விட்டார்கள்.

கலக்கி விட்டார்களே வேடர்கள்

கலக்கி விட்டார்களே வேடர்கள்

மூன்றாவது நாள் நடந்த போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் அவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்று கூறியதும் போட்டியில் வெறி கொண்டு இரண்டு டீமும் செயல்பட்டு வந்தது. போட்டிக்கு உடல்வலிமை மட்டுமல்லாமல் சமயோஜித புத்தியும் தேவை என்று அதில் பெசன்ட் ரவி நிரூபித்துவிட்டார். மரக்கட்டைகளை சேகரித்து வந்து தீயிட்டு கொளுத்தி மேலே இருக்கும் கயிறை எரிக்க வேண்டும் என்னும் டாஸ்க்கை தன்னுடைய மனவலிமையால் பெசன்ட் ரவி முடித்துவிட்டார். கயிற்றில் அனைவரும் நடுப்பகுதியில் எரிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இவர் மட்டும் கயிற்றின் முடிச்சு பகுதியில் தீ வைக்க ஆரம்பித்தார். அவருடைய முயற்சியை பார்த்து அனைவரும் அவரோடு சேர்ந்து கைகொடுத்து டாஸ்க்கை முடித்துவிட்டார்கள். அவருடைய முயற்சி சக்சஸ் ஆனதும் அவருடைய டிமே செம என்ஜாய் பண்ணி விட்டது. அதுவும் பெசன்ட் ரவியின் இடுப்பில் ஓடிவந்து லக்ஷ்மி பிரியா அமர்ந்து கொண்டது. வெற்றியை கொண்டாடியது அனைவருக்கும் தாங்களே வெற்றி பெற்றது போல தான் இருக்கிறதாம். உடல் வலிமையில் மட்டுமல்ல மனவலிமையும் சிறந்தவர் என்பதை அவருடைய ரசிகர்களுக்கு பெசன்ட் ரவி நிரூபித்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+