கண்களில் ஏக்கம்...சோகத்தோடு ஷபானா...என்னாச்சு என பதறும் ரசிகர்கள்
சென்னை : எப்போதும் சிரித்த முகமாக அனைவரையும் வசீகரிக்கும் ஷபானாவுக்கு என்ன ஆச்சு என அவருடைய ரசிகர்கள் பதறி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோதான் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது தான் தான் காதலிக்கும் விஷயத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்திய இவர் திடீரென்று இந்த மாதிரி வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்கள் பலவிதமாக பேசி வருகின்றனர்.

முதல் சீரியலில் வெற்றி
முதல் சீரியலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான ஒரு சில நடிகைகளில் ஷபானாவும் ஒருவர். ஜீ தமிழில் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் தன்வசப்படுத்தி இருக்கும் ஷபானா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். எப்போதுமே இவருடைய போஸ்ட்டுக்கு ஒரு சில நிமிடங்களில் கமெண்ட்டுகள் குவிய தொடங்கி விடும்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
அந்த மாதிரி தான் தற்போது அமைதியான ஒரு வீடியோவை இவர் வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்ததும் பலருடைய மனதில் என்னாச்சு!! என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. தான் எப்போதும் தன்னுடைய தோழிகளோடு ஜாலியாக வீடியோக்களை வெளியிட்ட இவர் தற்போது ஏக்கம் பொங்கும் பார்வையோடு அமைதியின் சொரூபமாக மாறியிருப்பது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து
செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷபானா சில மாதங்களுக்கு முன்புதான் தான் காதலிக்கும் விஷயத்தை கன்ஃபார்ம் பண்ணி இருந்தார். அவரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனும் காதலிப்பதும் அவர்களிருவரும் ரகசியமாக எங்கேஜ்மென்ட் முடிந்து இருப்பதையும் இலை மறை காயாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.

கலக்கல் கேப்ஷன்
நீங்கள் உங்களுடைய வயது அல்ல, அல்லது நீங்கள் அணியும் ஆடைகளில் அளவு அல்ல,உங்கள் முடியின் நிறமும் இல்லை. நீங்கள் உங்கள் பெயர் அல்ல, அல்லது உங்கள் கண்ணங்களில் உள்ள குழிகள். நீங்கள் படிக்கும் புத்தகங்கள் மற்றும் நீங்கள் பேசும் எல்லா வார்த்தைகளும் உங்கள் காலை குரல், மற்றும் நீங்கள் மறைக்க முயற்சிக்கும் புன்னகை, நீங்கள் உங்கள் சிரிப்பில் இனிமை மற்றும் அழுத ஒவ்வொரு கண்ணீர் நீங்கள், மிகவும் சத்தமாக பாட பாடல்கள் நம்பும் விஷயங்கள் நீங்கள், நீங்கள் விரும்பும் மக்கள், நீங்கள் சக்தி வாழ்ந்தவர்களில் அற்புதமான விஷயங்களை திறன், நீங்கள் கடவுளின் தலைசிறந்து உள்ளன, உங்கள் நோக்கம் உங்கள் அழகான ஆத்மா, நீங்கள் ஆசீர்வாதம் நீங்கள் மிகவும் அழகு செய்யப்பட்ட காதல், ஆனால் அது நீங்கள் மறந்து விட்டது என்று தெரிகிறது!! என்று யாருக்கும் புரியாத வகையில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

என்னவா இருக்கும்
காதல் செய்யும் விஷயத்தை கூட இலைமறைகாயாக யாருக்கும் புரியாத வகையில் வெளிப்படுத்திய ஷபானா, தற்போது இந்த மாதிரி கேப்ஷன் வெளியீட்டு சோகத்தின் வீடியோவை வெளியிட்டது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்த கேப்ஷன் மற்றும் போஸ்ட் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications