விக்ரமன்,ஆயிஷா மற்றும் ஷிவின் இடம் மோசமாக பேசிய அசீம்..கத்தி பேசினால் பயந்து விடுவாரா கமல்ஹாசனும்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் இன்றைய எபிசொட்டில் அசீம் நடந்து கொள்வதை பார்த்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் சக போட்டியாளர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளை அசீம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதை பார்த்து இதற்கு ரெட்கார்ட் கொடுக்கப்படுமா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

என்னதான் தப்பு அசீம் செய்திருந்தாலும் அதை உணராமல், நியாயப்படுத்தும் விதமாக கத்தி பேசினால் கமல் பயந்து விடுவாரா? அல்லது அதற்கு சரியான தீர்ப்பு சொல்வாரா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் நடப்பது

ஒவ்வொரு சீசனிலும் நடப்பது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரைக்கும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருந்து வருகிறது. முதல் சீசனில் ஓவியா மற்றும் ஜூலியின் சண்டை பெரிய அளவில் வரவேற்பையும், சர்ச்சையும் ஏற்படுத்திய நிலையில், அதைத்தொடர்ந்து ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், எந்த சீசனிலுயும் இல்லாத வகையில் இந்த சீசனில் சண்டை வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் ஒப்பிடும்போது இந்த சீசனில் அசீம் பேசுவது அனைவரையும் ஓரம் தள்ளும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆயிஷாவோடு ஏற்பட்ட தகராறு

ஆயிஷாவோடு ஏற்பட்ட தகராறு

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துதல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தனக்கு சரியான வரிசை கிடைக்க வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களை உனக்கு எல்லாம் தகுதி கிடையாது என்று அசீம் பேசி வருகிறார். முதலாவதாக ஆயிஷாவை நீ ஒன்பதாவது நம்பரில் நிற்பதற்கு உனக்கு தகுதியை கிடையாது என்று கூறுகிறார். அதனால் கோபமான ஆயிஷா எனக்கு என்ன தகுதி கிடையாது? என்று கேட்கவும் நீ பல நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்குள் பேச்சுவார்த்தை வளரும்போது "வாடி, போடி" என்று பேசுகிறார். நான் உங்களை வாங்க போங்க என்று தான் பேசுகிறேன். நீங்கள் இப்படி பேசாதீர்கள் என்று ஆயிஷா வார்னிங் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அசீம் பேசுகிறார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஆயிஷா செருப்பு கழட்டி காட்டுகிறார். இதனால் மேலும் அசீம் கோபமடைந்து விடுகிறார். தான் பேசிய வாடி, போடி எல்லாம் தவறு கிடையாது. தன் முன்பு கைகாட்டி பேசியது ஆயிஷா தான், அது போல செருப்பை கழட்டி என்னை மிரட்டுகிறாள் அது பெரிய தவறு என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

விக்ரமனுடன் ஏற்பட்ட பிரச்சனை

விக்ரமனுடன் ஏற்பட்ட பிரச்சனை

ஆயிஷாவை தொடர்ந்து விக்ரமனை சீண்டி பார்க்கிறார். விக்ரமன் ஆறாவது இடத்தில் நிற்பதால், விக்கிரமனுக்கு ஆறாவது இடத்தில் நிற்பதற்கு தகுதி இல்லை என்று அடுத்த பிரச்சனையை இழுக்கிறார். அப்போது விக்ரமன் எதனால் எனக்கு தகுதி இல்லை என்று கொடுக்க, நீயும் தூங்கிக் கொண்டிருக்கிறாய், வீட்டில் வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதற்கு விளக்கங்களை விக்ரமன் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நீ வெள்ளை சட்டை போட்டா ,பெரிய அரசியல்வாதியா ?அந்த திமிரை என்கிட்ட காட்டுறியா?...வாடா போடா என்று விக்ரமனையும் திட்டுகிறார். அதற்கு விக்கிரமன் நான் உன்னை மரியாதை இல்லாமல் பேசவில்லை. நீ இப்படி பேசாதே என்று வானில் கொடுக்கிறார்.

ஷிவின் கொடுத்த பதிலடி

ஷிவின் கொடுத்த பதிலடி

சக போட்டியாளர்களிடம் அசீம் நடந்து கொள்வது தவறு என்று அறிவுரை கூறுவதற்காக ஷிவின் பேசுகிறார். நீங்கள் ஆயிஷாவிடம் வாடி போடி என்று பேசியது தவறு தானே? என்று கேட்டவும். உன்னை எல்லாம் பாவம் பார்த்து தான் பட்டன் அனுப்பாமல் அப்போ விட்டிருந்தாங்க. நீ எல்லாம் வந்து பேசாத போ என்று ஷிவினையும் திட்டுகிறார். ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார் .அதை குறித்து பிக் பாஸ் எந்த ஒரு வார்னிங் கொடுக்கவில்லை .அதுபோல 13 போட்டியாளர்கள் வரிசையில் இருப்பவர்களை அடுத்த வாரம் பாதுகாப்பில் இருக்கும் எட்டு போட்டியாளர்கள், மூன்று போட்டியாளர்களின் இடங்களை மாற்றம் செய்து கொள்ளலாம் .அதில் எட்டு போட்டியாளர்களும் அசீம் ஒன்பதாவது இடத்தில் இருந்தவரை மறுபடியும் ஆயிஷாவின் இடத்திற்கு மாற்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+