கத்துறது, சண்டை போடுறது, டாய்லெட் போய் அழுவது.. ரிப்பீட்...
சென்னை: அக்ஷராவின் நடவடிக்கையைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடிக்கடி இதே போல செய்து கொண்டிருந்தால் எப்படி என்று பலர் புலம்பி வருகிறார்கள்.
அக்ஷராவுக்கு ரம்யா கிருஷ்ணன் சப்போர்ட் கொடுத்ததால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அரண்டு போன ரசிகர்கள்
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருந்து வரும். அந்த மாதிரிதான் சிலவேளைகளில் அக்ஷரா செய்யும் செயல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்த அக்ஷரா தற்போது ஆர்ப்பரிக்கும் கோபத்தை காட்டி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் செய்வது சரியா??தவறா??என்று பல பட்டிமன்றங்களில் துவக்கி உள்ளனர்.

அப்போ அப்படி...இப்போ இப்படியா??
ஐந்தாவது சீசன் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு கத்திப் பேசுவது என்றால் பிடிக்காது, அப்படி பேசும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் அப்படி நான் வளர்க்கப்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்த அக்ஷரா தற்போது செய்யும் செயல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. அப்படி பேசிய இவரா இப்படி மாறிவிட்டார் என்று பலர் அவருக்கு ஆறுதல் கூறி சப்போர்ட் கொடுக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் எல்லாமே நடிப்புதான் பேச்சு மட்டும் அப்படி இருக்கு நடவடிக்கை அப்படி இல்லையே என்று கூறி வருகின்றனர்.

கோபத்தில் அக்ஷரா
நேற்றைய எபிசோடுகளில் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக போட்டியாளர்கள் பலர் டாஸ்க்களில் வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருந்தனர். விளையாட்டு என்று வந்தால் அதில் தன்னுடைய திறமையை காட்டுவதில் எப்போதுமே முதன்மையாக இருக்கும் அக்ஷரா இந்த முறையும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரை சக போட்டியாளர்கள் வெளியில் துரத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் தான் என்று இவருக்கும் தெரிந்து இருந்தாலும் நான் வெற்றி பெற வேண்டும் அதற்கு தடையாக இருக்கும் போட்டியாளர்கள் மீது கடும் கோபத்தில் வார்த்தைகளை விட்டு வருகிறார்.

ரிப்பீட் ஆகும் வசனம்
நேற்றைய எபிசோட்டில் ராஜு அக்ஷராவின் பலூனை உடைத்ததாக இருந்தாலும்சரி, சதுர கட்டையின் மீது அமர்ந்துகொண்டு அக்ஷராவின் விளையாட்டை முடித்து விட வேண்டும் என்று ராஜு செய்த செயலாக இருந்தாலும் சரி அனைத்திலும் ராஜுவின் மீது பயங்கர கோபத்தில் இருந்த அக்ஷராவிடம் பிரியங்கா பேசியதால் பிரியங்காவின் மீது அப்படியே கோபம் திரும்பிவிட்டது. இதனால் கோபத்தில் பிரியங்காவிற்கு அக்ஷராவுக்கும் சண்டை தொடங்கியதால் எப்போதும் போல அவர் கத்திக்கொண்டு அனைவரையும் மிரட்டி விட்டு பாத்ரூம் போய் வழக்கம்போல அழத் தொடங்கிவிட்டார். இதைப்பார்த்து மாநாடு பட வசனத்தை சொல்லி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications