ரசிகர்களை ஏமாற்றி விட்டாரா கமல்??...இனியாவது போக்கு மாறுமா??
சென்னை: மீண்டும்.. மீண்டும்.. முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புவது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் கூட வெறுக்கத்தக்க வகையில் உள்ள இந்த மாதிரியான கண்டெண்ட் வீடியோக்களை ஏன்?ஒளிபரப்புகிறார்கள்.. என்று எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.
முதல் சீசனில் பல சர்ச்சைகளை சந்தித்த பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் ஓவர் ரீச் காரணமாக பல தடைகளை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் எட்டியுள்ளது.

களைக்கட்டும் பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டாலே ஐபிஎல் சீசன் ஆரம்பித்து விட்டது போல் செல்லுமிடம் பார்க்குமிடம் பொருள் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய பேச்சும், அவர் இப்படி செய்திருக்கக் கூடாது..! இவர் இப்படி செய்திருக்கலாம்..! என்று ஒவ்வொருவருடைய கருத்துப் பரிமாற்ற நிகழ்வு நீக்கமற அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கும். அப்படியிருக்க தன்னை அறியாமலே அனைவருக்கும் நிகழ்ச்சியின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நிகழ்ச்சியின் பார்வையாளராக மாறிவிடுகின்றனர்.

நெருடலான காட்சிகள்
அவ்வாறு நிகழ்ச்சியின் மேல் ஈர்ப்பு கொண்டு நிகழ்ச்சியின் பார்வையாளராக மாறும் ஒரு நபருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் நல்ல விஷயங்கள் கிடைக்கப் பெறாவிட்டாலும கெட்ட கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர் பெறாமல் இருத்தல் அவசியமாய் இருக்கிறது.தற்பொழுது பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற நெருடலான காட்சிகளை எடிட் செய்து ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதையும் மீறி இவ்வாறான ஒழுக்கக்கேடான செயல்களை ஒளிபரப்பிய விஜய் டிவி அதன் மூலம் எந்தவிதமான பயனை அடைய விரும்புகின்றது..!??

பொறுப்புணர்வு வேண்டும்
விஜய் டிவி போன்று பெரிய அளவில் ரசிகர் வட்டங்களை வைத்திருக்கும் சேனல்களுக்கு மற்ற சேனலை விட பொறுப்புணர்வு அதிகம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது இந்த வேலையில் அவசியமாயிருக்கிறது. லாபம் என்பது நோக்கமாக இருந்தாலும் லாபம் மட்டுமே பிரதான நோக்கமாக வைத்து செயல்படுவது விஜய் டிவி போன்ற பார்வையாளர்கள் வட்டத்தை தன்வசம் வைத்திருக்கும் சேனலுக்கு அழகல்ல என்று இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, சமையல் கலை நிகழ்ச்சி, நீயா நானா போன்ற கருத்துப்பரிமாற்றம் நிகழ்ச்சி மூலம் நல்ல என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விஜய் டிவி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூடுதல் கவனத்தை செலுத்தி அதன் போக்கை எந்தவித நெகட்டிவ் கருத்துக்களை மக்களிடம் ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொண்டாள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்புகிறார்கள் என்பதையும் தாண்டி கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காகவே ஒரு கூட்டம் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவர் செய்யும் சிறுபிள்ளைத்தனமான தவறுகளுக்கும் கூட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஞ்சாயத்து வைக்கும் கமல் இவ்வளவு பெரிய விவாதத்திற்கு உள்ளான சம்பவத்தைப் பற்றி எதுவும் பேசாதது ரசிகர்களை சற்று ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஒருவேளை முத்தம் என்பது கமல் அவர்களுக்கு பிடித்த விஷயம் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாரா!!? என்று அவரையும் கலாய்த்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications