நிரூப் என் தம்பி இல்லை.. நான் அவனுக்கு அக்காவும் இல்லை..நிரூப்பை கலாய்த்த பிரியங்கா
சென்னை: எனக்கும் நிரூப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரியங்கா பகிங்கிரமாக தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் போன சீசனின் அர்ச்சனா, பாலாஜி போல அக்கா, தம்பி பாசத்தை பிழிவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அடிக்கடி முட்டிக்கொள்வது இயல்பா அல்லது கண்டெண்ட்டா என்று குழம்பிய ரசிகர்களுக்கு தற்போது விளக்கம் கிடைத்திருக்கிறது.

தொகுப்பாளராக மனம் கவர்ந்தவர்
தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று இருக்கும் பிரியங்கா பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய அறிமுகத்தை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இவருடைய கேரக்டரை பார்த்து இவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தன்னுடைய ஜாலியான கேரக்டரால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கூட்டணி எடுபடவில்லை
இவர் இந்த சீசனில் அறிமுகமாகும் போது இவர் கடந்த சீசனில் அறிமுகமான அர்ச்சனாவை போல பெயர் கெட்டுப் போய்விடுமோ என்று பலர் அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் என்னுடைய கேரக்டரில் நான் விளையாடுவேன் என்று விடாப்பிடியாக ரசிகர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த இவர் தற்போது அதையே தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சிலரால் நேரத்தில் நிரூப் மற்றும் அபிஷேக் உடன் சேர்ந்து விளையாடியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

திடீர் மனமாற்றம்
அபிஷேக் வெளியே சென்ற பிறகு பிரியங்கா தன்னுடைய விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டார். அபிஷேக் இருந்தவரைக்கும் அபிஷேக் இவரை அக்கா என்று அழைத்தும், இவர் தம்பி பாசத்தை பொழிந்து கொண்டு இருந்தனர். ஆனால் அபிஷேக்கின் வெளியேற்றத்துக்கு பிறகு தான் பிரியங்காவிற்கு ஞான உதயம் வந்துவிட்டது போல. அதற்குப் பிறகு அடிக்கடி நிரூப்விடம் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் இவர்கள் உண்மையில் சண்டை போடுகிறார்களா அல்லது இல்லையா என்று ரசிகர்களுக்கு சில நேரம் சந்தேகம் தோன்றி கொண்டிருக்கிறது.

பிரியங்காவின் கருத்து
நேற்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களின் குணங்களை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, ப்ரியங்கா நிரூப் பற்றி பேசியது ரசிகர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது. நிரூப் எனக்கு தம்பியும் இல்லை நான் அவனுக்கு அக்காவும் இல்லை. இந்த வீட்டில் ரொம்ப பிடித்தது நிரூப் தான். ஆனால் சில நேரங்களில் அவன் செய்யும் செயல்களை பார்க்கும் போது கழுத்தை பிடித்து நெரித்து கொல்ல வேண்டும் போல தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். ரசிகர்களுக்கு இவருடைய இந்த பதில் வியப்பை கொடுத்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications