தோளில் சாய்ந்தபடி...காதலை வெளிக்காட்டிய ஷபானா
சென்னை: முதல் முறையாக தனது காதலருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட ஷபானாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.
இதுவரைக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த காதல் ஜோடி தற்போது தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டதும் ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு இருக்கத்தான் செய்கிறது.
காதலை சொல்லிவிட்ட ஜோடியிடம் இனி கல்யாணம் எப்போது என்ற கேள்விகள் பாய்ந்து வருகிறது.

கண்டுபிடித்த ரசிகர்கள்
ஜீதமிழ் கதாநாயகிக்கும் விஜய் டிவி கதாநாயகனுக்கும் காதல் கனெக்ஷன் ஏற்பட்டுவிட்டது என்று பல மாதங்களுக்கு முன்பே ரசிகர்கள் கூறிவந்த நிலையில், இதுவரைக்கும் மௌனமாகவே இருந்த ஜோடிகள் தற்போது முதல்முறையாக தங்களுடைய ஜோடி போட்டோவை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த செய்திக்காகவே காத்திருந்த ரசிகர்கள் வாழ்த்துக்களை மழைபோல பொழிகிறார்கள். ஷபானாவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இவருக்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்ப பெண்களுமே பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இவருக்காகவே பலர் இந்த செம்பருத்தி சீரியல் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் பலர் மீம்ஸ்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.

ஷபானாவுக்கும் கோபம் வரும்
ஜீ தமிழில் டி ஆர் பி யின் பல வருடங்களாகவே முன்னணியில் இருந்து வரும் செம்பருத்தி சீரியலின் கதாநாயகிதான் ஷபானா. இவர் முதன்முதலில் சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் முதல் சீரியலில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். தன்னுடைய க்யூட்டான அழகையும் சாந்தமான நடிப்பையும் அழகாக வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் க்யூட் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய ஒவ்வொரு எபிசோடுகளையும் மிஸ் பண்ணாமல் பார்க்கும் தீவிரமான ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். ஒருநாள் இவருடைய சீனை பார்க்கவில்லை என்றாலும் மறுநாள் மறு ஒளிபரப்பிலாவது பார்த்துவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள் கூட இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ஆரம்பத்தில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடித்த கார்த்திக் சுப்புராஜ்க்கும் இவருக்கும் காதல் என்றெல்லாம் பல கிசுகிசுப்பு பரவி வந்தது. பொதுவாகவே ஒருவர் பாப்புலர் ஆகிவிட்டாலே அவரைப்பற்றி பலவிதமான வதந்திகள் பரவி வருவது ஒன்றுதான். ஆனால் இது கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் இந்த மாதிரி பரப்பி விட்டார்கள் என்று ஷபானா ரொம்பவே கோபப்பட்டு விட்டார். அதனாலேயே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி தவறாக பேசிய நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் சீரியலில் வேண்டும் என்றால் யாருக்கு ஜோடி ஆக வேண்டும் என்று ரசிகர்கள் முடிவு பண்ணலாம். ஆனால் தன்னுடைய சொந்த விஷயத்தில் ரசிகர்கள் யாரும முடிவெடுக்க முடியாது. அதற்கு என்று எங்கள் வீட்டில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், எனக்கும் அது தெரியும் என்று அதிரடியான ஒரு போஸ்டை ஒன்றை போட்டிருந்தார். இதை பார்த்து இவரை பற்றி வதந்திகளை பரப்பி வந்தவர்கள் வாயை மூடி விட்டனர்.

கையில அது என்னது
அதற்கு ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தான் இவருக்கும் பாக்கியலெட்சுமி சீரியலில் நடிக்கும் ஆரியனுக்கும் காதல் என்று இவர்கள் இருவருமே இலைமறைகாயாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்காக தெரிவித்திருந்தனர். இவர்களுடைய போஸ்டை பார்த்ததும் பலர் கண்டுபிடித்தாலும் ஒருசிலர் அப்படியெல்லாம் இருக்காது, இதுவும் வதந்திகளாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் ஒரு சில நாட்களுக்கு முன்பு ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் இரு கைகளில் எங்கேஜ்மென்ட் மோதிரம் இருப்பது போன்று ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதில் ஒன்று ஆணுடைய கையாகவும் ஒன்று பெண்ணுடைய கை யாகவும் இருந்தது அதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இது ஷபானா உடைய கை தானே என்று கேட்டு வந்தனர். அதற்கும் அவர் மழுப்பலாக சிரிப்பை மட்டுமே பதிலளித்திருந்தார்.

ஜோடி போட்டோ பறக்குது
ஆரியனின் போஸ்டை பார்த்த ரசிகர்கள் உடனே ஷபானாவின் இன்ஸ்டாகிராம் போஸ்டை பார்க்கும்போது, மலர்களுக்கு மத்தியில் கையைத் தூக்கியபடி மலரை ரசித்தவண்ணம் அவர் இருந்த போட்டோவில் கைவிரலில் அதே மோதிரத்தை கண்டுபிடித்து விட்டனர். அதனாலேயே பலருக்கு என்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்று கூறிவந்த நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு டிவி தொகுப்பாளரும் நடிகருமான மதன் பாண்டியனின் பிறந்தநாளில் ஷபானாவும் ஆரியனும் ஜோடியாக போட்டோக்களை எடுத்து இருந்தனர். இந்த போட்டோஸ்கள் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷபானா ஆரியனுடன் எடுத்த ஜோடி போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த போட்டோஸ்கள் தான் தற்போது ரசிகர்களினால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications