கண்ண காட்டி மிரட்டும் ஜூலியை பார்த்து கதிகலங்கிப் போன ரசிகர்கள்
சென்னை : பார்த்ததும் எவ்வளவு பெருசு என்று பதறி போகிற மாதிரி பெரிய கண்ணாடியை போட்டுக்கொண்டு கலக்கும் ஜூலியை பார்த்ததும் இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறது.
டைட் உடையில் ரசிகர்களின் மனதை டைட் ஆக்கிய ஜூலியை பார்த்து கலாய்ப்பதற்காக நெட்டிசன்கள் ரெடி ஆகி விட்டனர்.
எத்தனை நாளைக்குத்தான் இப்படியே கலாய்ச்சுட்டு இருப்பிங்க எங்க தலைவி அழகே வேற ரகம் தான் என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டமும் இன்ஸ்டாகிராமில் அலைமோத தான் செய்கிறது.

கண்ணாடி மறைக்குது
கண்ண கண்ண உருட்டி.. என்ற பாடல் வரிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம கண்ண மறைச்சி கண்ணாடி போட்டுக்கிட்டு, ஸ்டைலான காஸ்ட்யூம்ல ரீல்ஸ் வீடியோ போட்டிருக்கிறார், நம்மை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஜூலி. வேறென்ன வழக்கம் போல தான் நம்ம நெட்டிசன்கள் 'தடை அதை உடை'என்பது போல் ஜூலியின் போஸ்ட்டை உடைத்து துவம்சம் செய்ய கிளம்பிவிட்டனர்.

இந்த நெட்டிசன்கள் தொல்ல தாங்கல
பொதுவாகப் ஜூலி போஸ்ட் போட்டாலே நம்ம நெட்டிசன்கள் ஜாலி ஆகிவிடுவார்கள். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோவை, போட்டோவை போட்டிருந்தாலும், அது நன்றாகவே இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு குரூப் கிளம்பிவிடும். எந்த போஸ்ட்க்கும் கமெண்ட் பண்ணாதவர்கள் கூட ஜூலி போஸ்டை பார்த்தால்... காண்டாகி கமெண்ட் பாக்ஸில் விமர்சித்து விட்டு செல்வார்கள் போல, ஆனால் ஜூலி எதைப்பற்றியும் அசட்டை செய்வதாக இல்லை.தன் பாட்டுக்கு தன் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

மல்லுக்கட்டாக தான் இருக்கு
ஜல்லிக்கட்டு ஜூலி சமூகவலைதளங்களில் மல்லுக்கட்டு பண்ணி அவருக்கும் சலித்து விட்டது. நல்ல பக்குவமான முதிர்ச்சியடைந்த பெண்ணாகவே மாறி விட்டார். தற்பொழுது கூட கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாக இவர் போட்டுள்ள வீடியோ இவரது ரசிகர்கள் மத்தியில் ..ஆகா ..ஓகோ.. என்று வரவேற்பை பெற்றாலும் இவரது ஹேட்டர்ஸ்கள்.. ஐயோ ...ஐயோ என்று கதறி கமெண்ட் பாக்ஸில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

கத்துக்க நிறையவே இருக்கு
பொதுவாக மக்கள் செலிபிரிட்டிகளிடமிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஜூலி இடம் கற்றுக் கொள்ளவும் ஒரு சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது .வாழ்க்கையில் எப்படி போராட்ட குணம் இருக்க வேண்டும் என்பதை பிக்பாஸ்க்கு முன்பு இருந்த ஜூலியிடமும்.., வாழ்க்கையில் எப்படி வாழக்கூடாது என்பதை பிக்பாஸ் வீட்டுக்கு உள்ள இருந்த ஜூலியிடமிருந்தும்.., வாழ்க்கை எப்படி சகிப்புத்தன்மையுடன் கடந்து செல்லவேண்டும் என்பதை பிக்பாஸ் பின்பு இருக்கிற ஜூலியிடமிருந்து கத்துக்கலாம்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications