போட்டில் ஏறி நின்று.. முடியை விரிச்சுப் போட்டு.. ஜாலியான ஜூலி.. !
சென்னை: கடலுக்குள் போனது போதாது என்றும் ஹாயாக போட் மீது நின்றுகொண்டு முடியை விரிச்சுப் போட்டு மாஸ் காட்டியிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி.
தலைமுடியை கோதி அலையலையாய் பறக்கவிட்டு ரசிகர்களின் மனதையும் அலை பாய வைக்கிறாரே என ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்.
கொஞ்ச நாளாகவே மாடர்ன் உடையை காணவில்லையே என்ன காரணம் என ஏங்கி போய் ரசிகர்களும் பீல் பண்ணுகிறார்கள்.

கடலுக்குப் போன ஜூலி
கடலுக்குள் காற்று வாங்கப் போன ஜூலி மாஸ் பர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார். யாரு இது நம்ம ஜூலியா என்று ரசிகர்கள் கேக்குற மாதிரி இவருடைய லேட்டஸ்ட் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் போட்டோ ஷூட்டில் பிசியாக இருந்து கொண்டிருந்தார். ஆனால் இப்ப சமீப காலமாக அதிகமான போட்டோஷூட் எடுப்பதில்லை. சிம்பிளாக ஒரு சில போட்டோக்களை எடுத்து இருக்கிறார். அதனை நினைத்து இவரிடம் நிறைய ரசிகர்கள் கமெண்ட்ஸ் களில் கேட்டு வருகின்றனர். இப்போ முன்னாடி மாதிரி நிறைய போட்டோஷூட் எடுக்க மாட்றீங்க என்று அதற்கு ஜூலியும் தன்னுடைய சிரிப்பை மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதனால் இவர் மீண்டும் மாடலிங் போட்டோ ஷூட் எடுப்பாரா இல்லையா என்று சிலர் குழம்பி வருகிறார்கள்.

அதிகரித்த ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னாடி எல்லாம் இது எப்படி செட் ஆகும். கலாச்சார சீரழிவு, அரைகுறை ஆடையில் எல்லாரும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பித்ததும் டிஆர்பியில் இந்த நிகழ்ச்சியை அடிச்சிக்க எதுவும் வர முடியாது. அந்த அளவில் ரசிகர்கள் இதனை தொடர்ந்து பார்த்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கன்டஸ்டன்ட்களுக்கும் வாக்களித்து தங்களுடைய சீரியல் ஜனநாயகத்தையும் காட்டி வந்தனர். ரசிகர்களின் பேராதரவினாலே இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல சீசன் களக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வருஷங்கள் போனாலும் இன்னும் மாறலையே
தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழ் பிக்பாஸ்க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அதில் பலர் கலந்து கொண்டு இருந்தாலும் அவர்களில் ஒருவராக ஜூலி கலந்துகொண்டிருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த இவருடைய கேரக்டர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் ரொம்பவே மோசமாக மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்து பல வருடங்கள் ஆனாலும் இதனை மறக்காத ரசிகர்கள் பலர் இவரை திட்டி வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் க்கு பிறகு இவர் ரொம்பவே மாறி விட்டார் என இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

கண்டுக்காத ஜூலி
வெருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் ஜூலியும் ஒவ்வொரு இடத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இவருடைய வளர்ச்சியை பார்த்து பிடிக்காத சிலர் இவரைப் பற்றி பல்வேறு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் .நடிப்பில் அதிகமான ஆர்வத்தை வைத்திருப்பதால் நடிகையாக மாறுவதற்கு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் . இந்தநிலையில் இதுவரைக்கும் மாடலிங் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதனால் தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இருந்தாலும் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் போட்டு வருகிறார். அவருடைய போஸ்ட் பார்த்ததும் முன்பு அதிகமாக நெகட்டிவ் கமெண்ட்களை போட்ட ரசிகர்கள் இப்போ இவரை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வேற மாதிரி ஃபீலிங் தான்
அந்த மாதிரிதான் தற்போது சிலுசிலுவென வீசும் கடல் காற்றை சுவாசித்தபடி போட்டிங் சென்றிருக்கிறார். அதில் தன்னுடைய தலைமுடியை காற்றிலாடும் விதமாக கைவிரல்களால் தூவிவிட்டு கெத்தாக நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து பலர் கவிதைகளை போகிறார்கள். அதில் ஒரு சிலர் இவரை கடல்ராணி என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீங்க பிக் பாஸ் ஜூலி இல்லை ஜல்லிக்கட்டு ஜூலி தான் என்று இவருக்கு மீண்டும் சாம்பிராணி போடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications