வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! காதலனோடு போட்டோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு பதில் கொடுக்கும் வகையில் தன்னுடைய காதலனோடு எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் 15 வருடங்களாக காதலிப்பதாக கூறியிருக்கிறார் இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உன் மேல ஒரு கண்ணு என்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த கீர்த்தி சுரேஷ் தற்போது நடிக்கும் திரைப்படங்களில் கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். எனக்கு காமெடியும் தெரியும், ரொமான்ஸும் தெரியும் என்று ஒவ்வொரு படத்திலும் அவருடைய அழகும் திறமையும் மெருகேறிக் கொண்டே போகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதுபோல சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் இணையத்தில் அடிக்கடி அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் உடன் சேர்ந்து பைரவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷும், விஜயும் காதலித்து வருவதாக பல வதந்திகள் பரவி வந்தது.
அதிலும் விஜயின் நண்பர் சஞ்சீவ் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷ் தங்கி இருப்பது கூட விஜயால் தான் என்றெல்லாம் கூட சிலர் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் இந்த வதந்திகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதில் தான் அந்தோணி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும், எங்களுடைய காதல் இன்னும் தொடரும் என்றும் கூறியிருக்கிறார். காதலரோடு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷும் அவருடைய காதலர் அந்தோணியும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அந்தோணி தற்போது கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருக்கிறாராம். ஹபீப் ஃபீரூக்குடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன் முதன்மை உரிமையாளராக இருக்கிறாராம்.
அதுபோல அந்தோணிக்கு கேரளா மற்றும் துபாயில் கோடி கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளி நாட்களில் இருந்து கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராக இருந்து.. கொச்சியில் இருவரும் இளங்கலை படிப்பை தொடர்ந்து நட்பை காதல் என்கிற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டில் சம்மதம் தெரிவித்ததால் அதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் திருமணம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுபோல கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி சுரேஷ்குமாரின் மகள் தான். பேபி ஜான் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதிகமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதிலும் கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications