பிரியங்கா அனுபவித்த வேதனை.. நேரில் பார்த்திருக்கிறோம்.. இரண்டாவது திருமணம் செய்ய காரணம்! கேபிஒய் சரத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிரியங்காவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் முடிந்தது. இவருடைய திருமணத்திற்கு பிறகு பிரியங்கா பற்றி கேபிஒய் சரத் மற்றும் அவருடைய மனைவி இருவரும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்கள். பிரியங்கா பட்ட கஷ்டங்கள் குறித்து அதில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் மேட்ச்சை விடவும் சோசியல் மீடியா பக்கங்களில் பிரியங்காவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்திகள் தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரியங்காவிற்கு ஏற்கனவே விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவருடன் திருமணம் முடிவடைந்து இருந்தது. ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

Vijay TV Priyanka

பிரியங்காவின் போட்டோஸ்

தன்னுடைய விவாகரத்து செய்தி பற்றி பிரியங்கா எந்த இடத்திலும் பேசவில்லை. இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டதும் இந்த நபர் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகமாக இருந்தது. பிறகு தான் அவர் டிஜே வசி இலங்கை அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பது தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகு பிரியங்கா லண்டனுக்கு ஹனிமூன் சென்று இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

அதுபோல லண்டனில் தன்னுடைய பிறந்தநாளையும் கணவரோடு கொண்டாடி இருந்தார். இப்போது மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் பிரியங்கா திருமணம் முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன பிறகும் பிரியங்கா பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

பிரியங்காவின் இன்னொரு முகம்

பிரியங்காவின் இரண்டாவது திருமணம் பற்றி சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரியங்கா பற்றி கேபிஒய் சரத் மற்றும் அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் பேசும்போது பிரியங்காவை ஜாலியான நபராகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரோடு நெருங்கி பழகுபவர்களுக்கு தான் அவர் எவ்வளவு சென்சிட்டிவான ஆள் என்பது தெரியும். பிரியங்கா அழுது பலமுறை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அன்புக்கு ஏக்கம்

பிரியங்காவின் நண்பர்களுக்கு தான் அவருடைய வாழ்க்கையில் இன்னொரு பக்கம் தெரியும். வெளியே தன்னுடைய கஷ்டங்களை பற்றி பிரியங்கா எந்த இடத்திலும் பேச மாட்டாங்க. ஆனால் பிரியங்கா ரொம்ப எதிர்பார்த்தது அன்பை மட்டும் தான். பிரியங்காவால் திருமண வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் செய்ய முடியும் ஒரு குடும்பத்திற்கு தேவையான எல்லா விஷயத்தையும் அவரால் நிறைவேற்றும் போது அவர் எதிர் தரப்பில் எதிர்பார்த்தது அன்பு மட்டும்தான்.

Vijay TV Priyanka

காதல் எதிர்பார்ப்பு

தன்மீது உண்மையான காதலோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது பிரியங்காவிற்கு கிடைக்கவில்லை. இப்போது அவர் திருமணம் செய்திருக்கும் வசியை பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும். வசி பிரியங்கா எதிர்பார்க்கும் காதல் மற்றும் பாதுகாப்பு கொடுப்பார் என்று எங்களுக்கு தெரிகிறது. அதனால் இனி பிரியங்கா வாழ்க்கையில் அழுகை இருக்காது.

நண்பரின் ஆசை

பிரியங்கா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நண்பர்களின் ஆசை. பிரியங்காவின் திருமண நாளில் அவர் கண்கலங்கி அழுதது கூட அவருடைய ஏக்கத்தின் வெளிப்பாடுதான். பல நாள் ஏக்கம் இப்போது நிறைவேறியிருக்கிறது. இனி பிரியங்காவின் குடும்பத்தினரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவங்க அம்மா எவ்வளவு வேதனைப்பட்டாங்க என்று எங்களுக்குத் தான் தெரியும். வசி பிரியங்காவின் வாழ்க்கையில் வந்த பிறகு பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. இனி அவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கேபிஒய் சரத் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+