பல வருடங்களுக்குப் பிறகு வெளியான மெட்டி ஒலி செல்வத்தின் புகைப்படம்.. எதிர்பார்க்காத தற்போதைய நிலை!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்து வந்த விஸ்வநாதன் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
பல வருடங்களாகவே சீரியல்களில் நடிக்காமல் இருந்த இவருடைய தற்போதைய நிலை குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
விஸ்வநாதன் கடைசியாக பொன்னூஞ்சல் என்ற சீரியலில் நடித்து அதற்குப் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்து வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த மெட்டிஒலி
சன் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக இப்ப வரைக்கும் இருந்து வரும் சீரியல்தான் மெட்டி ஒலி இந்த சீரியலில் நடித்து நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். இந்த சீரியலில் நடித்தவர்கள் ஒரு சில நடிகர்கள் இதிலிருந்து திரைப்படங்களுக்கு மாறி இருக்கின்றனர் ஆனாலும் அவர்களுடைய நிஜப் பெயரை மறந்து சீரியலில் அவர்கள் நடித்த பெயர்களை இப்ப வரைக்கும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. இவர்கள் எங்கே சென்றாலும் அந்த கேரக்டரின் பெயரை கூறித்தான் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

ரசிகைகளை கவர்ந்த செல்வம்
அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த கேரக்டரில் ஒருவராக இருப்பவர்தான் செல்வம். இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் போது பெண் ரசிகர்கள் பலர் தங்களுக்கு செல்வம் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்று ஏங்கி கொண்டு இருந்தார்கள். அந்த அளவிற்கு விஸ்வநாதன் செல்வம் கேரக்டரால் ரசிகர்களின் மனதில் கவர்ந்து இருக்கிறார். இப்ப வரைக்கும் அவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. செல்வமாக நடித்த விஸ்வநாதன் கல்லூரி படிப்பை முடித்து அதற்கு பிறகு சின்ன சிறிய நாடகங்களை நடித்து சீரியலில் நடக்க தொடங்கி இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் சீரியல் மற்றும் நாடகம் மூலம் பிரபலமான தொழிலதிபரின் ஒருவரின் மகளை திருமணம் செய்திருக்கிறார்.

பொன்னூஞ்சல் சீரியல்
தற்போது விஸ்வநாதனுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம். இந்த நிலையில் மெட்டி ஒளி சீரியலுக்கு பிறகு பொன்னூஞ்சல் என்ற சீரியலில் மட்டுமே இவர் நடித்திருந்தார். சினிமாத்துறைக்கு செல்ல பல முயற்சிகள் எடுத்தாலும் முயற்சிகள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் தான் தற்போது இவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சீரியல்களில் நெடுந்தொடர்களில் நடிப்பது எவ்வளவு முக்கியத்துவமோ அதற்கான கேரக்டரில் நடிக்கிறதும் முக்கியத்துவம். நாம் அந்த சீரியலை விட்டு விலகி இருந்தாலும் இல்லை அந்த சீரியல் முடிவடைந்தாலும் கூட ரசிகர்கள் இப்ப வரைக்கும் நம்மளுடைய பெயரை மறந்துவிடக்கூடாதபடி நாம் இருக்க வேண்டும் என்று இவரே அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தற்போதைய நிலை
சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டேன் ஆனால் எனக்கு சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனக்கு இது மிகவும் வருத்தமாக ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்த நிலையில் இவருடைய புகைப்படம் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications