நடிகர் மோகன்லால் அம்மா காலமானார்.. இவ்வளவு பிரபலம் இருந்தும் எளிமையாக வாழ்ந்தாரே! பிரபலங்கள் வருத்தம்
சென்னை: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் அம்மா சாந்தகுமாரி (Santhakumari ) இன்று 90 வயதில் காலமானார். இந்த துயரச் செய்தி, திரையுலகினரிடமும், மோகன்லால் ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லாலின் அம்மா மறைவு
மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக் காரணமாக உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் முழு கவனத்துடன் பராமரித்து வந்துள்ளனர்.
மகனின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு மாற்றப்பட்டு, எளிமையான குடும்ப வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுமாரி , மறைந்த விஸ்வநாதன் நாயரின் மனைவி.
விஸ்வநாதன் நாயர், கேரள அரசின் சட்டத்துறைச் செயலராக பணியாற்றியவர். அரசு பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், சாந்தகுமாரி மிகவும் எளிமையான, அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். பிரபலம் நிறைந்த திரையுலக வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியான வாழ்க்கை அவரின் அடையாளமாக இருந்தது.
மோகன்லால் பல இடங்களில் தன்னுடைய அம்மாவோடு இருக்கும் பாசம் மற்றும் அன்பை பற்றி பேசி இருக்கிறார். குறிப்பாக, தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிறகு, முதன்முதலாக தன் தாயை சந்திக்க வீட்டிற்கு சென்ற தருணத்தை அவர் பல பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். தன் வாழ்க்கையிலும், நடிப்புப் பயணத்திலும் தாயின் ஒழுக்கமும், ஆசீர்வாதமும் தான் அடித்தளமாக இருந்தது என்று அவர் அடிக்கடி கூறியுள்ளார்.
ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர்! ஷூட்டிங் முடிந்து ஊருக்கு செல்ல திட்டம்! நடந்தது என்ன?
கடந்த ஆண்டுகளில் அன்னையர் தினம் உள்ளிட்ட சிறப்பு நாட்களில், தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளார். சாந்தகுமாரி, மோகன்லாலின் மனைவி சுசித்ரா, பேரன் பிரணவ், பேத்தி விஸ்மயா ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். மோகன்லாலின் மூத்த சகோதரர் ப்யாரேலால் கடந்த 2000 ஆம் ஆண்டில் மறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த துயரமான செய்தி வெளியானதும், மலையாள திரையுலகினர் பலரும் நேரில் சென்று, அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகர் மம்மூட்டி, மோகன்லால் இல்லத்திற்கே நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்களும், திரையுலக நண்பர்களும், மோகன்லால் அம்மா பற்றிய நினைவுகளை நினைவுகூர்ந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மோகன்லால் சாந்தகுமாரி இறுதிச் சடங்குகள் டிசம்பர் 31, 2025 அன்று நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications