மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை..அஜய் கிருஷ்ணா ஜெஸி ஜோடி விலகியது ஏன் தெரியுமா?
சென்னை: மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4ல் இருந்து சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா ஜெஸி ஜோடி விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் மாகாபா ஆனந்த். அவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்று அஜய் கிருஷ்ணா சொன்னாதால்தான் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. விஜய் டிவி பிரபலங்கள் தங்களுடைய கணவர் மனைவியோடு சேர்ந்து பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன் களை நிறைவு செய்துள்ள நிலையில் 4வது சீசன் கடந்த சிர மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் 9 ஜோடிகள் பங்கேற்றுள்ளனர். சின்னத்திரை பிரபலம் ஃபரீனாவும் அவரது கணவர் உபைத் ரஹ்மானும் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அண்ணியார் ரேகாவும் அவரது கணவர் வசந்தும் பங்கேற்று உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

அஜய் கிருஷ்ணா ஜோடி
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் மூலம் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார். சினிமாவில் கோமாளி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒளியும் ஒலியும் பாடலை பாடி உள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான ஜெஸியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

புதுமணத்தம்பதியர்
இவர்களை மிஸ்டர் அண்ட் மிஸஸ் 4 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து 45 நாட்களில் இவர்கள் இளம் ஜோடியாக போட்டியில் களம் இறங்கினர். இந்த நிகழ்ச்சியில் இவர்களை தவிர மீதம் இருக்கும் ஜோடிகள திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்தவர்களே.

திடீர் விலகல்
அனைவருக்கும் சமமாக அஜய் - ஜெஸி ஜோடி போட்டி போட்டு தைரியமாக இரண்டு சுற்றுக்களை விளையாடினர்.இந்நிலையில் திடீரென்று இருவரும் போட்டியில் இருந்து பாதியிலே விலகியுள்ளனர். இந்த தகவலை நடுவர் தேவதர்ஷினி மேடையில் அறிவித்தார். எதற்காக திடீரென இந்த முடிவை இவர்கள் எடுத்தார்கள் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

மாகாபா ஆனந்த்
இந்த வாரம் நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாகவே நடந்தது. ரேகா கிருஷ்ணபா ஜோடி அவித்த முட்டை மஞ்சள் கரு உடன் மிளகாய் பொடி எல்லாம் சாப்பிட்டனர். இறுதியாக எலிமினேசன் ஆகப்போகும் போட்டியாளர்களை நடுவர்கள் மேடைக்கு வரவழைத்தனர். 4 ஜோடிகள் தப்பித்த நிலையில் 4 ஜோடிகள் மேடைக்கு வந்தனர். அதிலும் இரண்டு ஜோடிகள் தப்பிக்க இரண்டு ஜோடிகள் பக் பக் மனநிலையில் இருந்தனர். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இந்த வாரம் யாருமே எலிமினேசன் ஆகப்போவதில்லை என்று சொல்லி அதற்கான காரணத்தையும் கூறினார்.

வடஇந்தியாவில் செட்டில் ஆன அஜய்
அஜய் கிருஷ்ணா ஏற்கனவே உதித் நாராயணன் போலவே பாடக்கூடியவர். அவரை உதித் நாராயணன் தத்தெடுத்துக்கொண்டார் எனவும் அவர் வட இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறினார். ஆனால் அது பற்றி அஜய் கிருஷ்ணா இதுவரை எந்த செய்தியும் வெளியிடவில்லை. இந்தநிலையில் ரசிகர் ஒருவர் அஜய் கிருஷ்ணாவின் இன்ஸ்டாகிராமில் ஏன் போட்டியில் இருந்து விலகினீர்கள்? என்று கேட்டுள்ளார். உங்களை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications