பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நெகிழ்ச்சியாய் பேசிய மைனா நந்தினி.. மொத்தத்தையும் உளறிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மைனா நந்தினி முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நிகழ்ச்சிக்குள் நான் 30,40 நாட்கள் தான் இருப்பேன் என்று நினைத்தேன் என்ற உண்மையை உளறி இருக்கிறார்.
இதுவரைக்கும் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் சில தன்னுடைய குறைகள் சிலவற்றை கூறுவதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

சரவணன் மீனாட்சி மைனா
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேறிய மைனா நந்தினி முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு தனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சின்னத்திரை ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் தான் மைனா நந்தினி மற்றும் யோகி. மதுரையில் பிறந்து வளர்ந்த நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து அவரே எதிர்பார்க்காத அளவில் இப்ப வரைக்கும் ரசிகர்கள் அவரை மைனா என்று தான் அழைத்து வருகின்றனர்.

காதல் திருமணம்
அது மட்டுமல்லாமல் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக மைனா பங்கேற்றுகிறார். அதற்கு பிறகு அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாண முதல் காதல் வரை போன்ற சீரியல் களில் நடித்து வந்தார். அது மட்டுமல்லாமல் நம்மை விட்டு பிள்ளை, விரும்பன், விக்ரம், சர்தார் போன்ற திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். மைனாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இரண்டாவதாக யோகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துரு என்ற ஆண் குழந்தை உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். எல்லா போட்டியாளர்களும் போல அல்லாமல் இவர் ஒரு வாரம் கழித்து வைய்ல்ட் கார்ட் என்டிரியாக உள்ளே நுழைந்த அவர் தற்போது 103 நாட்கள் கடந்து வீட்டிற்குள்ளே இருந்தார். ஆரம்பத்தில் மைனா பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அவர் தனது கருத்தை எந்த இடத்திலும் முன் அறிவிப்பதில்லை, தைரியமாக பேசவில்லை, மணிகண்டன் உடன் சேர்ந்து கொண்டு சேப் கேம் விளையாடுகிறார். சீரியஸான இடங்களிலும் காமெடி என்கிற பெயரில் கிரன்ஸி செய்து கொண்டிருக்கிறார் என்று இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணமாகவே இருந்தது.

நெகிழ்ச்சியான நன்றி
விமர்சனங்களை அனைத்தையும் தகர்த்து மைனா 103 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி கடைசி வாரத்தில் எலிமினேஷன் ஆகி வெளியே வந்து முதல் முறையாக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில்" ஆரம்பத்தில் மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் யாவருமே தோல்வி பல கடந்து சென்றவர்களே! ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரை எனக்கு ஆதரவு தெரிவித்த எனது செல்ல குட்டிகளுக்கு ஐ லவ் யூ நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் 30 அல்லது 40 நாட்கள் கூட என்னுடைய குடும்பத்தை பிரிந்து தாக்குப் பிடிக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் எப்போ எல்லாம் டவுன் ஆகிறேனோ அப்ப எல்லாம் என்னுடைய ரசிகர்கள் எனக்கு உறுதுணையாக உன்னால் இன்னும் முடியும் என்று ஒவ்வொரு முறையும் என்னை பாதுகாத்திருக்கிறீர்கள். அதனாலேயே நான், சில குறைகள் எனக்கு இருந்தாலும் அதை நீங்கள் கூறியதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இதுவரைக்கும் நீங்கள் ஆதரவு தந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. லவ் யூ என்று முடித்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications