என்னது இவ்வளவு பெருசா... நமீதாவின் செருப்பை பார்த்ததும் கலாய்க்கும் போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் விஜய் டிவி.,யில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் கமல். இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கமலே கூறினார். அப்படி கமல் கூறாத, நீங்கள் கவனிக்காத பிக்பாஸ் வீட்டின் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தான் இங்கே பார்க்க போகிறோம்.

பிக் பாஸ் தொடக்கம்

பிக் பாஸ் தொடக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் வெற்றிகரமாக மூன்றாம் தேதி நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. தொடங்கிய முதல் நாளே ஆட்டம்போட்டு, வானவேடிக்கையோடு நிகழ்ச்சி தொடங்கியிருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல போட்டியாளர்கள் புதுமுகங்களாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் அவர்களைப் போல சாதிக்க துடிப்பவர்களுக்கு தங்களை போல் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனர்ஜியாகத்தான் இருந்து வருகிறது.

புதுமுக போட்டியாளர்கள்

புதுமுக போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் இவர்களெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே ஒரு போட்டியாளர்கள் ரெடி பண்ணி வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு போல ஒரு சிலர் கலந்துகொண்டு இருந்தாலும் பலர் புதுமுகங்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரிதான் மிஸ் இந்தியா பட்டத்தை பெற்ற நமீதா மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது இவரைப்போல இருப்பவர்களுக்கும் ,வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்களை தாங்கிக் கொண்டு எப்படியாவது ஒருநாள் சாதித்து விட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் முன் மாதிரியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

மிஸ் இந்தியா நமீதா மாரிமுத்து

மிஸ் இந்தியா நமீதா மாரிமுத்து

திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோ வில் மிஸ் இந்தியா பட்டத்தையும், மிஸ் டிரான்ஸ்பர் இன்டர்நேஷனல் 2020 விருதையும் வென்றிருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது பலருக்கு முன்னுதாரணம் தான். இவர் எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவேண்டும் என்று பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். போட்டியாளர்களில் ஸ்டில் இவருடைய பெயரும் அடிக்கடி அடிபட்டுக் கொண்டு தான் இருந்தது ஆனால் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு தான் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது.

வீட்டில் இருந்து வெளியேற்றம்

வீட்டில் இருந்து வெளியேற்றம்

இவர் சசிகுமார், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடித்த நாடோடிகள் 2 படத்தின் மூலம் முதல் முறையாக சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். நடிகையை ஆவதற்கு முன்பே இவர் மாடலிங் துறையில் தனது சமூகத்தின் சார்பாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படிக்கட்டாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவர் கமலஹாசனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நமீதா மாரிமுத்து கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பாலின மாற்றத்தை கண்டதால் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறியிருக்கிறார்.

கம்பீரமான உயரம்

கம்பீரமான உயரம்

பிறகு அவருடைய வீட்டில் அதை ஏற்றுக் கொண்ட பிறகு தான் தன்னுடைய சாதனைகள் தொடர்ந்து இருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்த அவர் ஒரு புத்தகத்தை கமலஹாசனுககு பரிசளித்துவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். சென்றதுமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக இவருடைய உயரமும் கம்பீரமும் இருந்தது. அங்கு இருந்த அனைவரும் இவரைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போய்விட்டனர். காரணம் இவருடைய உயரம் மட்டுமல்லாமல் அவருடைய காலில் அணிந்திருந்த செருப்பும் தான். ஸ்டூல் போல அது இருந்ததால் சக போட்டியாளர்கள் இவரை கலாய்த்து தள்ளினாலும் இவரும் ஜாலியாக என்ஜாய் பண்ணி விட்டு ஓரமாக செருப்பை கழற்றி விட்டு அனைவருடனும் மிங்கில் ஆகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+