அபிஷேக் உருட்டு தான் உலகத்திலேயே பெரிய உருட்டு...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: என்ன என்ன கதை சொல்றான் பாருங்க என்று பிரபலமான காமெடியால் அபிஷேக்கை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக அபிஷேக் செய்யும் வேலைகள் எல்லாம் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை உசுப்பேற்றி விடுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு குறை இல்லாமல் கொண்டு போய்க் கொண்டிருப்பதில் அபிஷேக் ஒருவர் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

வேற லெவல் திறமை
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருப்பதால், எப்படியும் இந்த சீசனில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி இந்த சீசன் அமையவில்லை. காரணம் இவர்கள் ஒரு பக்கம் அடித்துக் கொண்டாலும் மறுபக்கம் உடனே சமாதானம் ஆகி விடுகின்றனர். அதிலேயும் அபிஷேக் வேற லெவலில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். தன்னுடைய மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் அடுத்தவர்கள் மீது தெளித்துவிட்டு அதற்குமேல்... பாசம், உரிமை சுண்ணாம்பு பூசி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பெண் போட்டியாளர்கள் அதிகம்
இதுவரைக்கும் ஒளிபரப்பான சீசன் களை விட தற்போது ஒளிபரப்பான சீசனில் தான் அதிகமான பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் இதில் பல மாடல் அழகிகள் களமிறங்கி இருக்கின்றனர். அதில் பலருக்கும் பரிச்சயமான நபராக தான் இருந்து வருகின்றனர். ஆனால் தற்போது தான் ஒரு வாரத்திற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அனைவருமே பிரபலம் ஆகி விட்டனர். அதுவும் பட்டிதொட்டியெல்லாம் இவர்களுடைய பெயர் ஒலிக்கத் தொடங்கி விட்டது. அதுமட்டுமல்லாமல் பல போட்டியாளர்களுக்கு பேன்ஸ் பேஜ்களும் புதியதாக ரசிகர்கள் தொடங்கி இருக்கிறனர்.

ப்ரோமோவில் தனி இடம்
எத்தனை பேர் வந்தாலும் நான் அனைவரையும் சமாளித்து விடுவேன் என்று வைராக்கியத்தோடு இந்த சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கும் அபிஷேக் ஒவ்வொரு போட்டியிலும் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்கள் இடம் பேசும் வீரவசனங்கள் தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல இவர் நடந்து கொண்டு வருகிறார் என்று சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்போதுமே ப்ரோமோவில் அதிகமாக இவரே இடம் பிடித்து விடுவதால் இவரை பிடிக்காத பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் இவரை கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.
Recommended Video

அவ்ளோ பெரிய உருட்டா??
ஒருசிலர் நெட்டிசன்கள் இவர் ப்ரோமோ வில் வந்ததும் அபிஷேக்கை பிடிக்காதவர்கள் இதில் லைக் பண்ணவும் என்று ஒரு கமெண்ட் தட்டி விடுகிறார்கள். அதற்கு நிமிடத்தில் ஆயிரத்தை தாண்டி லைக்குகள் வந்துவிடுகிறது. காரணம் அந்த அளவுக்கு அபிஷேக் மீது பலர் காண்டில் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் இவர் அண்ணாச்சியிடம் சண்டை போடுவது போன்று நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை நம்பிய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து கடைசியில் ஏமாந்து போய் விட்டனர். அதுமட்டுமல்லாமல், அண்ணாச்சியிடம் பேசும்போது கூட இப்ப வேணாலும் கதவு தொறந்தா நான் வெளியே போய் விடுவேன் என்று கூறியிருக்கிறார். இதை வைத்தும் தற்போது இன்று டாஸ்க்கில் தாமரையை காப்பாற்றுவதற்காக இவர் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் பார்த்து ரசிகர்கள் உலகத்திலேயே பெரிய உருட்டு என்றால் அபிஷேக் உருட்டுதான் என்று கலாய்த்து தள்ளுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications