இவ்வளவு நாளா அப்படி பேசிக்கிட்டு..இப்போ இப்படி பண்ணலாமா?பாக்கியலட்சுமி சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போதைய எபிசோடை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஒரு சில நாட்களாகவே கோபி, ராதிகா திருமண மண்டபத்தில் பாக்யா மற்றும் அவருடைய மாமனார் இவர்களை மட்டுமே சீரியலில் காட்டி வருவதால் பலர் காண்டாகி இருக்கிறார்களாம்.
ஆரம்பத்தில் இருந்தே பாக்கியலட்சுமி என்ன செய்தாலும் அவருக்கு சப்போர்ட் கொடுத்த அவருடைய மகன் எழில் எங்கே என்று பலர் தேடி வருகிறார்கள்.

முரண்பட்ட கருத்துக்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்போடு இருந்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. பலர் திருமணம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் கோபிக்கு ஏற்கனவே குழந்தைகள் திருமணம் முடிந்த நிலையில் இருப்பதால் இனி அவர் திருமணம் செய்தால் இந்த சீரியலை பார்க்கும் சமூகத்தில் பலருக்கும் இதே போல முடிவெடுக்கலாம் என்று ஒரு தப்பான முன் உதாரணமாக ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடரும் விவாதங்கள்
பாக்கியலட்சுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே அவருடைய மகன் எழில்தான் பலவகையில் மோட்டிவேஷன் கொடுத்து வந்தார். மாமனார் ஒரு பக்கம் இவருக்கு மோட்டிவேஷன் கொடுத்தாலும் எழில் தன்னுடைய அம்மாவின் பக்கத்தில் நின்று பல நேரங்களில் உதவி செய்திருக்கிறார். ஆனால் தற்போது தன்னுடைய தந்தையின் திருமண நேரத்தில் இவர் எங்கே சென்றார்? இவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லையே? என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். கோபியின் திருமணத்திற்கு பாக்கியாவே சமையல் செய்ய வந்து இருக்கும் நிலையில் பாக்கியாவிற்க்கும் கோபிக்கும் இடையில் தற்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

கலாய்க்கும் ரசிகர்கள்
கோபியின் திருமணத்தை எப்படியும் நிறுத்தி விடுவேன் என்று அவருடைய தந்தை மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில் கோபி அவரையும் திட்டி வெளியே அனுப்பி விட்டார். இந்த நிலையில் யார் இவருடைய திருமணத்தை நிறுத்துவார்கள் என்று பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் எப்போதும் கோபியிடம் அம்மாவிற்காக சண்டை போடும் எழில் எங்கே போனார்? இந்த நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாக்யாவை ஒவ்வொரு விஷயத்திலும் மோட்டிவேஷன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் திரி மூட்டி விட்டு விட்டு இப்போ பக்கத்தில் இல்லாமல் போய்விட்டாரே? என்று எழிலை கண்டமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.

இப்படி பண்ணலாமா
கோபி ராதிகா திருமணம் எபிசோடு இரண்டு வாரங்களாக இழுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருமணம் எப்படியும் நடந்துவிடும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் எழிலின் தீவிரமான ரசிகர்கள் கடைசி நேரத்தில் வந்து எப்படியும் எழில் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்று இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் கடைசி நேரத்தில் தான் திறக்கப்படும் என்பது சீரியலின் சுவாரசியத்துக்காக இருந்தாலும் பல வாரங்களாக ஒரே கதையை இழுத்துக் கொண்டு இருந்தால் எப்படி என்று சீரியல் ரசிகர்கள் அழுத்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications