டாப்பில் இருக்கும் எதிர்நீச்சலில் சொதப்பல்களா?இதை கவனிக்க மறந்துட்டார்கள் போல..கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில சொதப்பல்கள் நடைபெற்றிருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

சீரியலின் கதை மதுரையை மையமாகக் கொண்ட நிலையில் அது அங்கே எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாட துவங்கி இருக்கும் நிலையில் அதிலும் சில தில்லாலங்கடி வேலை நடப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

பெண்கள் புரட்சி கதை

பெண்கள் புரட்சி கதை


ஏற்கனவே கோலங்கள், மெட்டிஒலி போன்ற ஹிட் சீரியல்களை கொடுத்த திருச்செல்வம் பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலை இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியானதும் அந்த சீரியலுக்கு அவருடைய ரசிகர்கள் காத்திருப்பதாக கூறி வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலும் பெண்கள் புரட்சி செய்யும் சீரியலாகவே இருந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் பல பெண்கள் தாங்கள் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பதை தெரியாமலே அடிமையாக இருப்பதை வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாக இந்த சீரியலின் இயக்குனர் கூறியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் இந்த சீரியலும் ஒத்து போவதால் இதை ரசிக்க ஆண் ரசிகர்களும் கிளம்பி இருக்கிறார்கள்.

கடிதத்தை கவனிக்கவில்லை

கடிதத்தை கவனிக்கவில்லை

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போதும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதன் எதிரொலியாக தான் சன் டிவியின் எந்த சீரியல் ப்ரோமோ வெளியானாலும் அதில் எதிர்நீச்சல் சீரியலை ப்ரோமோவை கேட்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலிலும் ஒரு சில சொதப்பல் சீன்கள் இருக்கிறது என்று ரசிகர்கள் அதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். அதில் ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு லெட்டர் வந்திருக்கும் அதை போஸ்ட்மேன் இடம் கையெழுத்து போட்டு ஜனனி வாங்கி பின்பு அதை அப்படியே படித்துப் பார்ப்பார் .பொதுவாக கடிதம் வந்தால் அது ஒட்டப்பட்டு தான் இருக்கும் ஆனால் இங்கே வந்த கடிதத்தில் அதை ஒட்டிக் கொண்டு வர வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

பஸ்சை கவனிக்கவில்லை

பஸ்சை கவனிக்கவில்லை

அதுமட்டுமல்லாமல் தற்போது இந்த சீரியலின் கதை மதுரையில் நடைபெறுவதாக இருக்கிறது. மதுரையில் இருந்து அருகில் இருக்கும் சோழவந்தானுக்கு அப்பத்தா ஊருக்கு அனைவரும் பொங்கல் கொண்டாட செல்ல இருக்கின்றனர். சக்தி வண்டி ஓட்ட அப்பத்தா ஜனனி ரேணுகா ஈஸ்வரி மற்றும் குழந்தைகள் என அனைவரும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது எடுத்த வீடியோ கிளிப்ஸ்களில் அந்த காருக்கு அருகில் வரும் கார்களில் அனைத்தும் ஈசிஆர், பாண்டிச்சேரி போர்ட போட்ட வண்டிகளாகவே வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். மதுரையின் பக்கத்தில் தான் இசிஆர் இருக்கிறதா? இயக்குனர் இதை கவனித்திருக்கலாம் என்று கலாய்கின்றனர்.

இப்படி ஒரு கண்டுபிடிப்பா பாஸ்

இப்படி ஒரு கண்டுபிடிப்பா பாஸ்

ஆனாலும் இன்னும் சில ரசிகர்கள் சீரியல் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதில் இவ்வளவு நுணுக்கமாக கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் எப்படி? கதையை கதையாக பார்க்க வேண்டும். அதில் பின்னாடி வருவதை எல்லாம் பூத கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டிருந்தால் கதை கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்று நெட்டிசன்களுக்கு பதிலடியும் கொடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+