மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா..?? ரவீந்தர்- மகாலட்சுமியை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: தற்போது சமூக வலைதளத்தை கலக்கிக் கொண்டிருக்கும் மகாலட்சுமி ரவீந்தரின் புதிய அப்டேட் பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயிருக்கிறார்களாம்.
இதுவரைக்கும் யூடியூப் சேனல்களிலும் சமூக வலைத்தளத்திலும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தற்போது விஜய் டிவியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விஜய் டிவியில் இவர்களுக்காகவே "வந்தாள் மகாலட்சுமியே" என்னும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறார்கள். அதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல வஞ்சனை இல்லாமல் கலாய்த்து வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியின் திருமணம் அவர்களே எதிர்பார்க்காத வகையில் சமூக வலைத்தளத்தை அலற விட்டு வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படங்களும் இவர்களைப் பற்றிய மீம்ஸ்களும் தான் கடந்த ஒரு சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் மேலும் நெட்டிசன்களுக்கு கண்டென்ட் கொடுக்கும் விதமாக ரவீந்தர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பாலோவர்ஸ் அதிகரிப்பு
தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு சில திரைப்படங்களை தயார் தெரிந்தாலும் அப்போது எல்லாம் இவருக்கு வரவேற்பு அந்த அளவிற்கு இல்லையாம். ஆனால் தற்போது திருமணம் முடித்த பிறகு இவருக்கு வேற லெவலில் கிடைத்து வருகிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்யும்போது கூட இவருக்கு இவ்வளவு பாலோவர்ஸ் இல்லையாம். ஆனால் தற்போது திருமணம் முடிந்த பிறகு இவருடைய பழைய வீடியோக்களை பல ரசிகர்களும் பார்த்து வருவதாக அவரே கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய திருமணத்தால் சமூக வலைத்தளத்தில் பல யூடியூப் சேனல்களும் லாபம் பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் சிறப்பு விருந்தினர்
திருமணத்திற்கு பிறகு கோவில், குளம் என்று சுற்றிக் கொண்டிருந்த ரவீந்தர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். இவர்கள் பேசும் பேச்சு எல்லாம் கண்டெண்டாக பலரும் எடுத்துக் கொண்டு இவர்களை கலாய்த்ததை பார்த்து இனி யாருக்கும் பேட்டி கொடுக்கப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் இவர்களை அழைத்து ட்ரெண்டிங் கஃப்பில்ஸ் என வழக்கம்போல விஜய் டிவி இவர்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறது. தற்போது அந்த நிகழ்ச்சிக்கான புகைப்படங்களும் ப்ரோமோக்களும் வெளியாகி இருக்கின்றன.

ரசிகர்களின் அறிவுரை
"வந்தாள் மகாலட்சுமியே" என்று புது நிகழ்ச்சியை வைத்து அதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் காதல் கதையினை கேட்டு சேனலுக்கு டிஆர்பி அதிகரிக்க சில வழிமுறைகளை கையாண்டு உள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள், "மகாபிரபு இங்கேயும் வந்து விட்டீங்களா", பலபேருக்கு வாழ்வு கொடுத்த நீங்கள் இப்போது விஜய் டிவிக்கு வாழ்வு கொடுத்து தொடங்கி விட்டீர்களா..!?? என்று நக்கலாக கிண்டல் செய்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஒரு சில ரசிகர்கள் வேண்டாம் இந்த விஜய் டிவி சகவாசம், ஏற்கனவே இங்கே இப்படி திருமணம் செய்தவர்கள் எல்லாம் எப்படியோ போய்விட்டார்கள். அதனால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த பக்கம் போகாதீங்க என்று இப்போதே வார்னிங்க் கொடுத்து வருகிறார்கள்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்!












Click it and Unblock the Notifications