#BREAKING: அதிமுகவின் பொன்விழா.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை..!
அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது
சென்னை: அதிமுக பொன்விழா கொண்டாட்டம், அவைத்தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.. இதனிடையே, இன்று நடைபெறவிருந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளைய தினம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 49 வருடங்களை கடந்து வரும் 17ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நாளை பொன்விழாவாக கொண்டாட அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்... பொன்விழாவன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் கழகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல, எல்லா இடங்களிலும் கொடி கம்பங்களை அமைத்தும் ஏற்கனவே இருக்கும் கொடிக் கம்பங்களுக்கு புது வர்ணம் பூசியும் விழாக்கோலம் பூண்டு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், அதிமுகவின் பொன்விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

நடைபெற உள்ள பொன்விழாவில், ஆண்டு மலரை வெளியிட அவை தலைவரை அறிவிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.. அவை தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது... மேலும் நாளைய தினம் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால், அதுகுறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது.
காரணம், தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்துள்ள நிலையில், இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இன்று நடந்து வரும் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, அதிமுக பொன்விழா நடைபெறவுள்ள அக்டோபர் 17-ஆம் தேதிக்கு முதல் நாள் அதாவது அக்டோபர் 16-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.. எனவே, சசிகலா விவகாரம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெள்ளியாகியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது...இதனிடையே இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுகவின் மா.செ.கூட்டம் நாளைய தினம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications