ஒரு நல்ல செய்தி... கொரோனாவில் இருந்து கோவையில் 5 பேர் நலம்பெற்றனர்
கோவை: கொரோனா பாதிப்பில் இருந்து கோவையில் 5 பேர் பூரண குணமடைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில் இந்த தகவல் சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில அமைந்துள்ளது. கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரயில்வே பெண் மருத்துவர் மற்றும் அவரது 10 மாத குழந்தை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் கொரோனோ தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர், ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த 5 பேரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர்கள் 5 பேரையும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவர்களும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் 59 பேர் கோவையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவேண்டும் என விரும்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை 2-ம் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் இருந்து 5 பேர் நலம் பெற்றிருப்பது கோவை மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இன்று கோவையில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளில் கண்டெயின்மென்ட் நடவடிக்கைகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications