பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு எளிமையாக முடிந்த திருமணம்.. மனைவி இந்த பிரபலம் தானா?
பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரசாந்தாக நடிக்கும் நடிகர் மகேஷுக்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக அறிமுகமான நடிகர் மகேஷுக்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சீரியல் நடிகர் மகேஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பிரசாந்த் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் முத்தழகு சீரியலிலும் கதாநாயகனின் தம்பியாக அமுதன் கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவருடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிந்திருந்த நிலையில் இன்று இவருடைய திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

தொடரும் இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விடுகின்றனர். கிட்டத்தட்ட இந்த சீரியல் நான்கரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் அதிகமான நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்கிற மாதிரி மாறிக்கொண்டே இருக்கின்றனர்.அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரசாந்த் என்கிற கேரக்டரும் அமைந்திருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் மூன்று நடிகர்கள் மாறி இருக்கின்றனர். அதில் கடைசியாக இப்போது மல்லியின் மகனாக பிரசாந்த் கேரக்டரில் நடிகர் மகேஷ் நடித்து வருகிறார்.

திருமணம் எப்போது
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகர் மகேஷ் நடிக்க ஆரம்பித்த பிறகு பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றது. மீனாவின் தங்கையோடு பிரசாந்திற்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. இதில் பல பிரச்சனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருமணம் இனி எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எங்கேஜ்மென்டிலே பெரும் பிரச்சனை நடந்த நிலையில் திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கலந்து கொள்ளுமா? இல்லையா? என்பது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்து வரும் நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துக்குள்ளேயே கதை நகர்ந்து வருகிறது. அதனால் மீனாவின் குடும்பம் அதிகமாக காட்டப்படவில்லை.

எளிமையான திருமணம்
இந்த நிலையில் சீரியல் நடிகர் மகேஷ் நடிக்கும் முத்தழகு சீரியலிலும் அவருக்கு இப்போது தான் திருமணம் முடிந்தது. அதேபோல தற்போது அவருடைய நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு எளிமையாக திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. அவருக்கு சென்னையில் இவிஎஸ் மஹாலில் வைத்து தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவருடைய மனைவியின் பெயர் பிரேமலதா ஆனால் இவர் மீடியா துறையை சார்ந்தவர் இல்லையாம்ய இவர் B.Tech படித்திருக்கிறாராம். தற்போது இவருடைய திருமணத்திற்கு முத்தழகு சீரியல் குழுவினர் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். சீரியலின் கதாநாயகன் கதாநாயகி உட்பட பலரும் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

வெளியான திருமண புகைப்படங்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் அணியிலிருந்து யாரும் திருமணத்தில் கலந்து கொண்டதாக இதுவரைக்கும் எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் திருமண நேரத்திலும் நடிகர் மகேஷ் ஃபோனின் சேட் செய்த புகைப்படத்தை பார்த்து மணமகள் என்ன நடந்துட்டு இருக்கு, இவர் யாருக்கு சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறார் என்கிற மாதிரி பார்ப்பது போன்று சில புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இதற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
காதல் தோல்வி.. வலியை உருக்கமாக பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. மிரட்டிய வில்லன் நிலைமை இதுவா? குவியும் கமெண்ட்ஸ் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications