ஆசை நிறைவேறி விட்டது உருக்கமாக பதிவிட்ட பாண்டியன் ஸ்டோர் காவியா...பெற்றோருக்கு பெருமை சேர்த்த மகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்கும் காவியா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தன்னுடைய பல நாள் கனவு நினைவு ஆன மகிழ்ச்சியில் காவியா ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது சைக்கிள் கேப்பில் கட்டடக்கலை நிபுணர் ஆகியாட்சி என்று பட்டத்தை பெற்று அசத்தியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் முல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல், அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி உள்ளது. இந்த சீரியலில் கதிர் மனைவியாக முல்லை கேரக்டரில் நடிக்கும் காவியா தற்போது நிஜ வாழ்க்கையிலும் சாதித்துக் காட்டி உள்ளார். படிப்பிற்கு வயதும், வேலையும் தடையே இல்லை என்பதை காவியா நிரூபித்து விட்டார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகிறார்கள். காவியாவிற்கு சின்னத்திரை நடிகைகளான பரினா, வாணி போஜன், நேகா, ஸ்ரீவித்யா, குமரன் என பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பொதுவாக சீரியல் நடிகைகளுக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருப்பது போன்று ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக இருந்து வருகிறது. அதுவும் சின்னத்திரையில் நடிகையாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணிக்கு சொல்லவே வேண்டாம். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்வதை விடவும் சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சீரியலில் இவர் முல்லை கேரக்டரில் அமைதியின் சொரூபமாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள், ரிலீஸ் வீடியோக்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் அறிமுகம்
காவியா அறிவுமணி படித்துக் கொண்டிருக்கும் போதே நடிப்புத் துறையில் ஈடுபட வேண்டும் என்று ஆசைக்கு அவருடைய பெற்றோர் அதற்கு சம்மதிக்க வில்லையாம். ஆனாலும் தான் நடித்தாலும் படிப்பை விட மாட்டேன் என்று வீட்டில் கூறிக்கொண்டு மாடலின் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாடலிங் செய்து கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கு காவியாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலில் இவர் அறிமுகமான ஒரு சில மாதங்களிலே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எதிர்பாராத விதமாக முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இதற்கு முன்பு முல்லையாக விஜே சித்ரா நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய திடீர் இறப்பு காரணமாக அந்த இடத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

மகிழ்ச்சியான செய்தி
ஆரம்பத்தில் முல்லையாக காவியாவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் தற்போது இவரை அந்த கதாபாத்திரத்தோடு ஏற்றுக் கொண்டு விட்டனர். சீரியலின் கதை படி தனது தன்மானத்திற்காக முல்லை மற்றும் கதிர் இருவரும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் காவியா தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் தனது ஆசை லட்சியத்தை நிறைவேற்றி இருக்கிறார். கட்டிடக்கலை படிப்பில் ஆர்வமாக இருந்த காவியா தற்போது அதில் பட்டத்தை பெற்றிருக்கிறார். நடித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த காவியாவிற்கு பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பகிர்ந்துள்ளார். அதில் கட்டிடக்கலை நிபுணர் ஆகியாச்சு..பட்டப்படிப்பு முடிந்தது. கட்டடக்கலை நிபுணராக வேண்டும் என்ற சிறிய எண்ணத்தில் இது தொடங்கியது. பின்னர் அதற்கான வழிகளை கண்டுபிடித்து படித்தேன். இறுதியாக அதை வெற்றி பெற்று முடித்தேன் என்று மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வாழ்த்துகளை மழை போல பொழிகிறார்கள்.












Click it and Unblock the Notifications