பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இப்படி ஒரு சொதப்பலா? உறவு முறையிலே குழப்பமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது மீனாவின் தங்கைக்கும் முல்லையின் அக்காவின் மகனுக்கும் திருமணம் நடக்கும் நிலையில் அதை குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி இருக்கின்றனர்.
அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலில் உறவு முறை குறித்து தெளிவில்லாமல் சொதப்பீட்டீர்களே என்று பலர் கலாய்கின்றனர்.
என்னதான் சீரியல் பார்த்து பார்த்து கதை எழுதினாலும் பல நேரங்களில் இப்படி ஒரு குழப்பங்கள் வர தான் செய்யும் அதை சீரியலாக பார்க்க வேண்டும் என்று சீரியலில் ரசிகர்கள் ஆமோதித்து வருகிறார்கள்.

வெளிப்படையான வில்லன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே மீனாவின் அப்பா ஜீவாவின் குடும்பத்தின் மீது பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் அந்த குடும்பத்தை எப்படியாவது பிரித்து விட வேண்டும் அந்த குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். அதுபோல பல்வேறு வில்லத்தனமான செயல்களையும் செய்து கொண்டிருந்தார். அதுவும் இப்போது ஒரு படி மேலே சென்று நான் தான் உங்களின் வில்லன் என்று தெரிவது போலவே அடுத்தடுத்து பல செயல்களை செய்து வரும் நிலையில் தற்போது அதை குறித்து ஜீவா மற்றும் மீனா இடையில் கூட கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது.

புது திருமணம்
ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல கதாநாயகி, கதாநாயகர்கள் இருக்கின்றனர். அண்ணன் தம்பிகளாக அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களுடைய ஒற்றுமையை குறைக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் முடிவு செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது மீனாவின் தங்கையின் திருமணம் நடைபெற இருக்கிறது. அதுவும் முல்லையின் அக்காவின் பையன் உடன்தான் மீனாவின் தங்கைக்கு திருமணமாம். ஆரம்பத்தில் இதே மாப்பிள்ளைக்கு தான் ஐஸ்வர்யாவை கட்டி வைப்பதாக இருந்தது பின்பு ஐஸ்வர்யா கண்ணனோடு திருமணத்தை செய்து விட்டார்.

மீனாவை மிரட்டும் ஜீவா
இந்த நிலையில் ஜனார்த்தனன் வீட்டு திருமணத்திற்கு செல்லக்கூடாது என்று ஜீவா முடிவெடுத்து இருக்கிறார். மீனாவும் தன்னுடைய முடிவு அதுதான் என்று இருந்தாலும் தன்னுடைய தங்கை வீட்டிற்க்கே வந்து கதறி அழுததை பார்த்த பிறகு மனதிற்குள் லேசான ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தங்கைக்காக திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றிய நிலையில், ஜீவா கல்யாணத்துக்கு போனா உங்க அப்பா கூடவே இருந்துற வேண்டியதுதான். நான் டைவர்ஸ் பண்ணிடுவேன் என்று மீனாவை மிரட்டி கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் குழந்தையும் உன்னிடம் தர மாட்டேன் என்று கூறியதை கேட்டு மீனா மிரண்டு போயிருக்கிறார்.

இவர்களுக்குள் என்ன முறை
இந்த நிலையில் இந்த திருமணம் என்ன முறையில் நடைபெறுகிறது என்று நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். அதாவது மல்லி முல்லையின் அக்கா, முல்லையின் அக்கா பையன் தான் மாப்பிள்ளை, முல்லை சித்தி என்றால் மீனாவும் சித்தி தானே? சித்தியின் தங்கையும் அப்போ சித்தி தானே? இது எப்படி திருமண உறவு வரும். கதையில் ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்பதற்காக உறவு முறையே இல்லாத ஒரு திருமணமா? வித்யாசமாக யோசித்து இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்க, இதையெல்லாம் ரசிக்க மட்டும் தான் செய்ய வேண்டும் ஆலசி ஆராயக்கூடாது. சீரியல் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் என்று சீரியல் அணியினர் நெட்டிசங்களுக்கு பதில் கொடுத்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications