திருமணத்திற்கு பிறகு வெட்கத்தில், எளிமையாய் ஜொலிக்கும் ஷபானா..வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: திருமணம் முடிந்ததும் புது பெண் களை ஷபானாவின் முகத்தில் தாண்டவம் ஆடுகிறது என்று ரசிகர்கள் செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக சிங்கிளாக போட்டோ வெளியிட்டிருக்கும் ஷபானா.
எளிமையாய் இருந்தாலும் தேவதையாக ஜொலிக்கிறார் என்று ஷபானாவின் ரசிகர்கள் வாழ்த்து மழைகளை குவிக்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய பார்வதி
செம்பருத்தி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த ஷபானாவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இவர் இல்லாத சீரியல் நன்றாகவே இல்லை என்று பல பேர் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சீரியலில் இவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் பல ரசிகர்கள் சீரியலில் பார்வதியை அதிகமாக காட்டவில்லை என்று பீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். பலர் ஷபானவின் பெயரை பார்வதி என்றே மாற்றி விட்டார்கள்.

அன்பு காதலாக மாறியது
ஷபானா சீரியலில் அமைதியின் சொரூபமாக இருந்தாலும் நிஜத்தில் குறும்புக்கார பெண்ணாகத்தான் இருந்துவருகிறார். அதை அவருடைய நெருங்கிய தோழிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கின்றனர். ஷபானாவின் காதலரான ஆரியன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக ஆரியன் இருந்தாலும் ஷபானா காதலித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்துவருகிறது. இரண்டு பேரும் ஒரே துறையில் இருந்தாலும் இவர்களுக்குள் அன்பு காதலாக மாறி இருக்கிறது. இதை இவர்கள் பல மாதங்களாக மறைத்துக்கொண்டு இருந்தனர்.

இன்ஸ்டாகிராமில் கசிந்த ரகசியம்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சமூக வலைத்தளத்தில் ஆரியனிடம், ஒரு பெண் எதார்த்தமாக உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு அதற்கு ஷபானா தான் பதில் சொல்லவேண்டும் என்று மறைமுகமாக ஆரியன் தனது காதலை இன்ஸ்டாகிராமில் வெளிக்காட்டியிருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீயாகப் பரவ தொடங்கியது. ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு செய்தியையும் ஷபானா வெளியிடாமல் தான் இருந்து வந்தார்.

ஷபானாவின் வைரல் வீடியோ
அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் எளிமையாக எங்கேஜ்மென்ட் முடித்துவிட்டு தங்கள் கை விரலில் மோதிரம் இருக்கும் போட்டோவை ஆரியன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார்.அதை பார்த்ததும் ரசிகர்கள் கன்பார்ம் செய்துவிட்டார்கள். ஆனாலும் இவர்கள் வெளிப்படையாக கூறவில்லையே என்று பலர் புலம்பி கொண்டிருந்தனர். இது உண்மைதானா?? அல்லது வதந்தியா??என்றும் பலர் நம்ப மறுத்து இருந்தனர். திருமணத்தன்று ஷபானா தன்னுடைய ரசிகர்களுக்கு ,இதுநாள் வரைக்கும் ஆதரவு தந்ததிருக்கு நன்றி கூறியும். தன்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்கள் அதிகமாக கேட்டுக்கொண்டிருந்தனர். அதனால் இந்த நேரத்தில் எனக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ரசிகர்கள் கூற வேண்டும் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வெட்கத்தில் ஜொலிக்கும் ஷபானா
இந்த நிலையில் இவர் தற்போது திருமணம் முடித்திருக்கிறார். கொட்டும் மழையில் எளிமையாக முடிந்த இவருடைய திருமணத்திற்கு ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மழையும் தங்களுடைய வாழ்த்துக்களை ஆசீர்வாதமாக அளித்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் . திருமணத்திற்குப் பிறகு அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்தபடி முகத்தில் வெட்கமும், நாணமும் எட்டிப்பார்க்க..தலை குனிந்தபடியே ஷபானா வெளியிட்ட போட்டோஸ்கள் அவருடைய ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இது போன்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று ஆசீர்வாதங்களை குவிக்கிறார்கள் .












Click it and Unblock the Notifications