ஆட்டம் போட்ட பிரியங்கா..அடக்கிய ஆண்டவர்..குதூகலிக்கும் ரசிகர்கள்
சென்னை: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினா..போச்சா..!!?? என்று இப்போ பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தான் செய்த நியாயம் அடுத்தவர்கள் செய்ததால் அநியாயமா என்று பிரியங்காவின் செயலுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இன்று இரவு பிரியங்காவுக்கு குறும்படம் இருக்கு என ரசிகர்கள் இப்பவே கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

வாத்தியார் ஆக மாறிய கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செயல்கள் வைரல் ஆகி விடும். அந்த மாதிரிதான் தற்போது ஐந்தாவது சீசனில் பிரியங்கா செய்து கொண்டிருக்கும் செயல் ரசிகர்களின் மத்தியில் எரிச்சலை ஊட்டி வருகிறது. எதற்காக இவர் இப்படி மாறிவிட்டார் என்று பலர் இவரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மறக்காமல் தான் ஒரு வாத்தியார் என்பதை நிரூபித்திருக்கிறார் கமல்ஹாசன்.

கமல் தொடங்கிவிட்டார்
வார்த்தை என்னும் சாட்டையை கையில் எடுத்த கமல் ஹாசனை பார்த்து, நியாயம் பேசுகிறேன் என்று பேசிக் கொண்டிருந்த பிரியங்கா வாயடைத்து போய் இருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் பலர் கலாய்த்து தள்ளி வருகின்றனர். என்ன மாதிரி எல்லாம் இந்த வாரம் முழுக்க பேசினார்?? இப்ப பேசு பார்ப்போம் என்று பலர் பிரியங்காவை வம்பு இழுத்து வருகின்றனர். பிரியங்காவை பற்றி கமல் பேசுவாரா என ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பேசிய வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஒரு பின்னடைவா
போன வார எலிமினேஷனில் பிரியங்கா எண்ணிக்கையில் முதலில் இருந்தார். ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு பின்னடைவை சந்திப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இவர் செய்த செயலும், பேசும் வார்த்தைகளும் ரசிகர்களுக்கு தற்போது பிடிக்காததால் இவருக்கு வாக்குகள் குறைந்து வருகிறது. இதை எதிர்பார்க்காத இவருடைய தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். என்ன...இப்படி பிரியங்கா மாறிவிட்டார் என இவர்கள் கூறிவருகின்றனர்.
Recommended Video

காண்டான பிரியங்கா
இரண்டு நாட்களுக்கு முன்பு அக்ஷரா பேப்பரில் எழுதி காட்டிவிட்டார் என்று குதித்துக் கொண்டிருந்த பிரியங்கா, போன வாரம் நிரூப் கையில் தான் எழுதியதை மறந்துவிட்டார் போல, அல்ல அது தவறு என்று அவருக்குத் தெரியவில்லையா என பல நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். என்ன இருந்தாலும் ஊருக்குதான் உபதேசம் என்று சிலர் சொல்வார்கள், அது போலத்தான் பிரியங்காவும் நடந்து கொண்டிருக்கிறார் அக்ஷரா செய்ததற்கு ஆர்ப்பரிக்கும் இவர், தான் செய்ததை அடியோடு மறந்து விட்டார் ஆனால் அதை மறக்காமல் ரசிகர்கள் பலர் பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்து கமல் பேசத் தொடங்கி இருக்கிறார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications