பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல முக்கிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை தமிழ்செல்வியின் திடீர் மறைவு திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்த அவர், எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் இன்னும் மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'சம்சார சங்கீதம்', 'காலம் மாறிப்போச்சு', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்த தமிழ்செல்வி, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
அவரது கணவர் பிரேம்நாத், சினிமா துறையில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், தற்போது தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த தமிழ்செல்வியின் நினைவாக நடைபெற்ற படத்திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் பேசிய அவர், மனைவியின் நினைவுகளை பகிர்ந்தபோது பலரையும் கண்கலங்க வைத்தார்.

வாழ்க்கை
தமிழ்செல்வியை பற்றி பேசிய பிரேம்நாத், "நான் சினிமாவுக்கு வந்தது என் தாய்மாமாவை நம்பித்தான். தமிழ்செல்வியும் சினிமாவில் இருந்ததால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியது அவருடைய விருப்பம். அதற்கு நான் முழு ஆதரவு கொடுத்தேன்" என்று கூறினார்.
அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்று வருகிறார்.
புற்றுநோயை வென்றும் உயிரை பறித்த விதி
பிரேம்நாத் கூறிய தகவல்களின்படி, தமிழ்செல்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாம். ஆனால் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டதால், அவர் முழுமையாக குணமடைந்ததாக மருத்துவர்களே ஆச்சரியப்பட்டதாக கூறியிருக்கிறார்.
அதன்பிறகு மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிய தமிழ்செல்வி, குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் கவனித்ததோடு, சொந்த ஊரான சிவகங்கை வரை காரை தானே ஓட்டி சென்று வந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்துள்ளார்.

தூக்கத்தில் பிரிந்த உயிர்
தமிழ்செல்வியின் இறுதி தருணங்களை நினைவு கூர்ந்த பிரேம்நாத், "அன்று கொஞ்சம் சோர்வாக இருப்பதாக சொன்னார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஒரு நாள் அட்மிட் ஆகி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று நினைத்தோம். நார்மல் வார்டில்தான் இருந்தோம். பேசிக்கொண்டே இருந்தவர், கொஞ்ச நேரம் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது. மருத்துவர்கள் மைல்டு ஹார்ட் அட்டாக் என்று சொன்னார்கள்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
நிறைவேறாத கனவு
மனைவியை இழந்த துயரத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாமல் தவித்த பிரேம்நாத், "நோயுடன் போராடிய காலத்தை கடந்து விட்டோம் என்று நினைத்து நிம்மதியாக இருந்த நேரத்தில் அவர் எங்களை விட்டு போய்விட்டார். பசங்களை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கினவர். அவர்களுடைய திருமணத்தை பார்த்துவிட்டு போயிருக்கலாம். அது மட்டும் தான் எனக்கு மிகப்பெரிய வலியாக இருக்கிறது" என்று கூறியபோது நிகழ்ச்சியில் இருந்த பலரும் கண்கலங்கினர்.

ரோபோ சங்கர் மனைவியின் உருக்கமான பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். "எங்கள் வீட்டில் நடந்த மாதிரியே இப்போது என் நண்பர் பிரேம்நாத் குடும்பத்திலும் ஒரு எதிர்பாராத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தமிழ்செல்வி அக்கா எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். யாரை பார்த்தாலும் அன்பாக பேசுவார். அவரை இப்படி திடீரென்று இழப்போம் என்று நாங்கள் நினைத்ததே இல்லை" என்று கூறினார்.
மேலும், "இந்த துயரத்தில் இருந்து பிரேம்நாத் அவர்களும், அவருடைய குழந்தைகளும் மீண்டு வர வேண்டும். வாழ்க்கை அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை தர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன்" என்றும் அவர் உருக்கமாக பேசினார்.

நண்பர்கள் தவிப்பு
தமிழ்செல்வியின் மறைவு செய்தி வெளியான நாள் முதல் அவருடன் பணியாற்றிய கலைஞர்கள், மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
புற்றுநோயை வென்று வாழ்க்கையை மீண்டும் கைப்பற்றிய ஒரு பெண், திடீரென உயிரிழந்தது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது.
திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தனது குடும்பத்தில் ஒரு தாயாகவும், மனைவியாகவும், நண்பர்களிடம் ஒரு அன்பான மனிதராகவும் வாழ்ந்த தமிழ்செல்வியின் நினைவுகள் அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?













Click it and Unblock the Notifications