பிரியங்காவின் நட்பின் பாசம்...மா.கா.பா.வை பார்த்ததும் பொங்கி வந்த கண்ணீர்
சென்னை: நட்பு என்றால் எப்போதுமே அது அழகு தான் என்பதை தற்போது பிரியங்கா மற்றும் மா கா பா நிரூபித்து விட்டனர்.
யாரும் எதிர்பார்க்காத மா கா பா வின் என்ட்ரியைப் பார்த்ததும் பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார்.
பிரியங்கா எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடைந்ததை பார்த்து ரசிகர்களுக்கும் ஆனந்தமாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனந்தக் கண்ணீர்
அதுவரைக்கும் சிரித்த முகமாக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர். ஒரு நொடியில் தன்னுடைய நண்பனை பார்த்ததும் முகம் மாறிப் போய் தன்னுடைய உண்மையான கேரக்டரை வெளிக்காட்டி விட்டார். இதுவரைக்கும் பிரியங்காவை ஜாலியான கேரக்டரில் சிரித்த முகமாகவே பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென்று இவர் கதறி அழுததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாலும் இது ஆனந்த அழுகைதான் என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் மா கா பா சிறப்பு அழைப்பாளராக வந்து நிகழ்ச்சியைப் பற்றி கண்ணாடி அறைக்குள் இருந்தபடியே சக போட்டியாளர்கள் இடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லையாம், அதுவும் பிரியங்கா எதிர்பார்க்கவே இல்லை. விஜய் டிவியில் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தாலும் நட்பில் இவர்கள் எப்போதுமே ஒன்றாகத்தான் இருந்து வருகின்றனர்.

வைரலான மீம்ஸ்கள்
பல நாட்களுக்குப் பிறகு தன் நண்பனை பார்த்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் வார்த்தைகள் வர தடுமாறி கொண்டிருந்த பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் உச்சி கொட்டி வருகின்றனர். ஏற்கனவே நட்பின் பெருமையை பற்றி பல திரைப்படங்களில் பார்த்துக் கொண்டிருந்தாலும் எதார்த்தமாக நடந்த நிகழ்வாக பிக்பாஸ் ரசிகர்கள் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரியங்கா மற்றும் மா கா பா வின் நட்பைப் பாராட்டி மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.

நண்பனின் ஆறுதல்
பிரியங்கா மா காபாவை பார்த்ததும் கண்ணாடியை உடைத்து விட்டு சென்று விடுவது போலத்தான் தன்னுடைய அன்பை ஆரவாரமாக காட்டிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கண்ணாடியில் மாகாபாவின் கையை பிடித்து இவர் கண்ணீர் சிந்தி கொண்டிருந்ததை பார்த்து சக போட்டியாளர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டனர். நட்பு என்றாலே பெரியதுதான் என்பதை தற்போது இவர்கள் இருவரும் நேற்று காட்டி விட்டனர். ஆனால் பிரியங்கா தனக்கே உரிய நக்கலோடும் மாகாபாவிடம் என்னுடைய ஷோவிற்கு வேறு யாரும் வந்து விட்டார்களா?? என்று கேள்வி கேட்டது அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது. அதற்கு அவர் வேறு யாரும் வரவில்லை. நான் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். சீக்கிரமாக வந்து உன் வேலையை பார்த்துக்கோ என்று இவர் சொல்லி பிரியங்காவுக்கு எனர்ஜி கொடுத்திருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications