இப்படித்தான் ரசிகர்களை ஏமாற்றிகிட்டு இருக்கீங்களா...பிரியங்காவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: அடப்பாவி...எல்லாம் டூப்பு தானா என்று பிரியங்காவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.
இவ்வளவு நாளாக இந்த மாதிரி பண்ணி தான் ரசிகர்களை ஏமாற்றி கொண்டிருந்தீர்களா என ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர்.
இந்த மாதிரி தான் நிகழ்ச்சிக்கு ஒரு ஆளு வேணும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்று பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்.

ஐந்தாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டாரம் ஒவ்வொரு சீசனுக்கும் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவை பார்த்துதான் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெரும் பரபரப்புக்கு இடையில் ஐந்தாவது சீசன் ஆரம்பமாகி இருக்கின்றது. அதில் போட்டியாளர்களும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் நிகழ்ச்சியை கலகலப்பாக தொடங்கிவிட்டனர்.

பல புதுமுகங்கள்
இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை பிக் பாஸ் 5வது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. தங்களுக்கு பிரபலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறிவருகின்றனர். இந்தநிலையில் பலருக்கும் பரிச்சயமான விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
தொகுப்பாளராக அறிமுகமாகி இந்த நிகழ்ச்சியில் ஒரு பாட்டு பாடி கலக்கலாக என்ட்ரி போட்டிருக்கும் பிரியங்காவை பார்த்ததும் அப்போ இந்த நிகழ்ச்சியில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் எப்போதுமே தான் முன்னோடி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது முதல் நாளே தன்னுடைய கலகலப்பான சேட்டையை ஆரம்பித்து விட்டார்.

எல்லாம் டூப்பா
நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் படி அப்படி அவர் என்னதான் செய்தார் என்று பார்த்தால், தான் தலையில் மாட்டியிருக்கும் டூப்ளிகேட் முடியை அப்படியே ஒன்று ஒன்றாக கழற்றி ராஜீவ் கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரோ என்னது அப்போ இது எல்லாம் உண்மை இல்லையா என்று வாயை பிளந்தபடி ஷாக் ஆகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல ரசிகர்களும் பிரியங்காவை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான் போய்விட்டார்கள் .

கலாய்க்கும் ரசிகர்கள்
தன்னுடைய டூப்ளிகேட் முடியை தைரியமாக அனைவருக்கும் முன் கழட்டி காட்டிய தில்லை பார்த்ததும் எங்க தலைக்கு தில்லை பார்த்தீர்களா??என்று அவருடைய ரசிகர்களே அவரை கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் இப்படி என்டர்டைன்மென்ட் இருந்தால்தானே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களும் கூறி வருகின்றனர். ஆனாலும் இந்தா..வச்சுக்கோ என்று இவர் ஒவ்வொன்றாக கழட்டி கொடுத்ததை பார்த்ததும் பலர் தன்னை மறந்து கலகலவென சிரித்து விட்டார்களாம்.












Click it and Unblock the Notifications