மைக்கை மாட்ட சொன்ன பிக்பாஸ்..அது அவருக்குத் தேவை இல்லையே...பிரியங்காவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிரியங்காவை தேடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மூன்றாவது ப்ரோமோவில் தரிசனம் கிடைத்து விட்டது.
டாஸ்க் என்று தொடங்கியதும் பலர் கண்ணீர் கதைகளை தொடங்கியிருக்கும் நேரத்தில் நம்ம எப்போதும் ஜாலிதான் என்று இவர் செய்யும் அட்ரா சிட்டி வேற லெவல் தான்.
மூன்றாவது நாளில் வெளியான 2 ப்ரோமோக்களும் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மூன்றாவது ப்ரோமோ கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மூன்றாவது நாள் தொடக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு வரைக்கும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலர் பலவிதமான கருத்துக்களை கூறி கொண்டிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். காரணம் இதில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கலவரங்களும், சண்டைகளும், ஜாலிகளும் பக்கத்து வீட்டில் நடப்பது போன்றே நடப்பதை பார்ப்பதற்காக பலர் தொடங்கிவிடுகின்றனர். அதுபோலத்தான் தற்போது ஐந்தாவது சீசனுக்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ்
இந்த சீசனில் மூன்றாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

நேத்துவரை அப்படி இன்னைக்கு இப்படி
முதல் நாளில் அனைவரும் அறிமுகத்தில் தொடங்கி சந்தோசமாக வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவர்கள். இரண்டாவது நாளிலும் எங்களுக்கு கோபமே வராது என்பது போல தான் ஒருவருக்கு ஒருவர் பாசமழை பொழிந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் இரண்டு தினங்களுக்குள் நன்றாக புரிந்து கொண்ட படி இவர்கள் பேசி பழகி வந்த நிலையில் தற்போது மூன்றாவது நாளில் கலவரம் ஆரம்பித்து இருக்கிறது. அதனை முதல் ப்ரோமோவில் காட்டியதும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

செம மோட்டிவேஷன்
முதல் ப்ரோமோவில் சண்டை களைக்கட்ட தொடங்கியதும் இன்னைக்கு நல்ல என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் கூறிவந்தனர். இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவில் பெண்கள் நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று ஒருவருக்கு ஒருவர் மோட்டிவேஷனல் கொடுத்து பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் வைராக்கியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்து வந்தனர். இவர்களின் இந்த கலக்கலான ப்ரோமோவுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் வேற லெவலில் இருந்ததால் இரண்டாவது ப்ரோமோவும் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

ப்ரியங்கா வந்துவிட்டார்
இரண்டு ப்ரோமோவும் வித்தியாசமாக இருந்தாலும் அதில் பிரியங்காவை காணவில்லை என பிரியங்காவின் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோ முழுக்க பிரியங்காவே இடத்தை பிடித்து விட்டார். அதில் அவர் எப்போதும் போல கலாய்க்க தொடங்கி விட்டார். இப்போது அவருடைய வாயில் விழுந்து இருப்பது ராஜூ. அவர் சின்னப்பொண்ணுவிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பங்கமாய் கலாய்த்து வருகிறார். அப்போது சின்னப்பொண்ணு விற்கு ராஜூ நேற்று டிஸ்லைக் சிம்பிள் கொடுத்ததற்காக அவர் என்ன மாதிரி பேசுவார் என்று அவரைப்போலவே பேசி கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

மைக்கை தவற விட்டு விட்டாரே
இவர் பேசுவதை பார்த்துக்கொண்டிருக்க ஒரு கூட்டம் இவரை சுற்றி அமர்ந்துகொண்டு கைதட்டி இவரை எங்கிரேஜ் செய்துகொண்டிருக்கிறது. இவர் எப்போதும் போல தனக்கே உரிய அந்த நகைச்சுவையோடு ராஜுவை கலாய்த்து கொண்டிருப்பதில் கவனத்தை செலுத்தியவர் தன் தோளில் மாட்டியிருந்த மைக் சரிந்து விழுவதை கவனிக்கவில்லை. ஆனால் அதை பிக்பாஸ் கவனித்து விட்டார். அவர் பிரியங்கா உங்கள் மைக்கை சரியாக மாட்டவும் என்று சொன்னதும் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் சிரித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் எங்க தலைவிக்கு மைக்கே தேவையில்லை என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications