பிரியங்காவின் வீட்டிற்கு வந்த புது நபர்.. இனி அவர் தான் உலகமாம்..!!??
சென்னை;விஜய் டிவி பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாலோயர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரியங்கா மேலும் தங்கள் வீட்டிற்கு வந்துள்ள புதிய வரவை குறித்தும் மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
இப்பதிவை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்து கூறி வருவதோடு சில கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். பிரியங்காவின் தம்பி மகளுக்கு வைத்துள்ள புது விதமான பெயரைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விஜய் டிவி செட் ப்ராபர்ட்டி
வாடகை வீட்டில் இருந்துவிட்டு கொஞ்ச நாட்கள் கழித்து சொந்த வீட்டில் செட்டிலாவது போல் ஜீ தமிழ்,சன் டிவி, என்று இருந்துவிட்டு இறுதியாக வந்து விஜய் டிவியில் செட்டில் ஆனவர் தான் பிரியங்கா. விஜய் டிவியின் மிகப்பெரிய நிகழ்ச்சி என்றாலே பிரியங்கா தான் முதல் சாய்ஸ் என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியின் முக்கிய ப்ராப்பர்ட்டியாகவே மாறிவிட்டார். கடந்த சில ஆண்டுகளில் பார்க்கும் பொழுது விஜய் டிவியில் மிக நீண்ட நாட்களாக இருக்கும் விஜே பிரியங்காவாகத்தான் இருப்பார்.

கலகலப்பான பேர்வழி
சும்மாவெல்லாம் விஜய் டிவி இவரை செட் ப்ராப்பர்ட்டியாக வைத்துக் கொள்ளவில்லை. இவரும் அதற்கேற்றார் போல் தன்னுடைய அவுட்புட்டை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். சூப்பர் சிங்கர் போன்று பாடல் சம்பந்தமான நிகழ்ச்சி என்றாலும், காமெடி நிகழ்ச்சிகள் என்றாலும்,எந்த மாதிரியான நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் தன்மை மாறாமல் அழகாக தொகுத்து வழங்குவதில் பிரியங்கா கில்லாடி. விஜே க்களில் அதிகமான கலாய் வாங்கும் பேர்வழி பிரியங்காவாகத்தான் இருக்க முடியும்.இருந்தாலும் எவ்வித கோபமும் படாமல் நிகழ்ச்சியை சலிப்புத் தட்டாமல் கலகலப்பாக கொண்டு சென்று விடுவார்.

அப்பா என்றால் தம்பி
பிரியங்கா என்னதான் ஜாலியான நபராக இருந்தாலும், அவருக்குள்ளும் சில சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி கூறும் போது கண்ணீர் மல்க அதனை வெளிப்படுத்தி இருந்தார். பிரியங்காவின் திருமண வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் தன்னுடைய அப்பாவை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும்,தன் அப்பாவிற்கு பிறகு தன் தம்பி தான் எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே என்று தன் தம்பி மீது உள்ள பாசத்தை பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் கூறியிருந்தார்.

தம்பி தந்த பரிசு
ஓணம் பண்டிகை போன்ற நல்ல நாட்களில் தங்கள் வீட்டிற்கு வந்துள்ள தம்பி மகளின் வரவை குறித்து மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார் பிரியங்கா. பதிவைப் பார்த்து ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்போது இப்படி நல்ல செய்தியை கூறுவீர்கள் என்று ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர். தன்னுடைய தம்பி மகளுக்கு இஹா என்று பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இஹா என்றால் அழகான பூமி அல்லது உலகம் என்று பொருள் இனி தம்பி மகள் தான் தன்னுடைய உலகம் என்று சொல்லாமல் சொல்ல வருகிறார் போல!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications