மற்ற நாள்களிலும், சனிக்கிழமைக்கும் பிரியங்கா காட்டும் வித்தியாசம்.. பங்கமாய் கலாய்த்து தள்ளிய அமீர்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது நிகழ்ச்சியில் பிரியங்காவின் செயல்பாடு இப்படித்தான் என்று அமீர் தன்னுடைய பாணியில் கலாய்த்து தள்ளுகிறார்.
பிரியங்காவோடு அதிகமாக நெருக்கமாக இருந்த அமீர் பேசியதை கேட்டு ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

முதலிடத்தில் பாதுகாக்கப்பட்ட பிரியங்கா
விஜய் டிவியில் தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்கா தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவருடைய ரசிகர்களுக்கு இந்த செய்தி முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின்பு இந்த நிகழ்ச்சியில் இவருடைய ஜாலியான கேரக்டரை ரசிக்கும் ரசிகர்கள் இவரால் தான் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் என்று கொண்டாடி வந்தனர். ஒருசில நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வாக்களித்து ஒவ்வொருமுறையும் முதல் இடத்தில் சேவ் செய்து வந்தனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி
ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 50 நாட்களுக்கு மேலே உள்ளே நுழைந்த அமீர் நிகழ்ச்சியில் நுழைந்ததும் ஒரு சில நாட்களில் போட்டியாளர்களுடன் நன்றாக பழகி விட்டார். ஆனால் ஏற்கனவே பரிச்சயமான பிரியங்காவுடன் இவர் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவருக்கு உள்ளே சென்றதும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருந்ததாம். அனைத்து போட்டியாளர்களும் உண்மையான குணத்தோடு நடந்து கொள்கிறார்களா?? அல்லது எல்லாம் நடிப்பா என்று புரிந்து கொள்வதற்கே ஒரு வாரம் ஆகி விட்டதாம்.

பிரியங்காவை பார்த்து வியந்த காரணம்
எந்த சூழ்நிலையிலும் அடிக்கடி பிரியங்காவோடு இருந்து வந்த அமீர் தற்போது அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார். அமீர் பிரியங்காவை பற்றி இப்படி வெளிப்படையாக பேசியதை பார்த்து பலரும் நாங்களும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம் என்று கூறி வருகிறார்களாம். ரசிகர்கள்தன் இதை கண்டுபிடித்துவிட்டார்கள் என்று பார்த்தால் ஒவ்வொரு வாரமும் மற்ற நாட்களில் எல்லாம் பிரியங்கா அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு ஜாலியாக இருந்தாலும் சனிக்கிழமை வந்துவிட்டாலே காலையிலிருந்தே இவருடைய கேரக்டர் மாறி இருக்கிறது. இதை அருகில் இருந்து பார்த்து பலமுறை அமீர் வியந்து போய் இருக்கிறாராம்.

மாற்றத்திற்கான காரணம்
கமல்ஹாசன் வரும் சனி மற்றும் இரவு எபிசோடுகளில் பிரியங்காவின் செயல்பாடு வித்தியாசமாக மாறிவிடுகிறது என்று ரசிகர்கள் தான் இவ்வளவு நாட்களாக கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அவருடைய நடவடிக்கைகளை இஞ்ச் பை இஞ்சாக கவனித்து அமீர் கலாய்த்து தள்ளியள்ளார். கமல் எதார்த்தமாக சாப்பிட்டாச்சா பிரியங்கா என்று கேட்டால் கூட பிரியங்கா சுற்றி வளைத்து பேசுவதை தன்னுடைய நக்கல் தனத்தோடு சேர்ந்து அமீர் பங்கமாய் பிரியங்காவை கலாய்த்திருக்கிறார். இதைப்பார்த்த பிரியங்காவின் ரசிகர்கள் அமீரை கலாய்த்து கமெண்டுகளை அனுப்பி வருகிறார்கள். என்னதான் பிரியங்கா ஒரு தொகுப்பாளராக இருந்தாலும் கமல் வரும்போது இவர் ஒரு குழந்தையாகவும், கமல் ஒரு ஹெட்மாஸ்டர் போல இவர் கண்ணுக்குத் தெரிகிறார் என்று கூறியிருக்கிறார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications