நிரூப்புக்கு ஏன் இந்த வெறுப்பு... பிரியங்காவை பார்த்ததும் கொதிக்கிறாரே.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த நிரூப்பும், பிரியங்காவும் இப்போது மோதிக் கொள்வதை பார்த்ததும் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பலர் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இது எல்லாம் நடிப்பாக இருக்குமோ என்று சந்தேகத்தையும் கிளப்பி வருகிறார்கள்.
பிரியங்காவின் செயலுக்கு எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்கிறாரே நிரூப் என்று பிரியங்காவின் ரசிகர்கள் நிரூப் மீது காண்டில் இருக்கின்றனர்.

நெட்டிசன்களின் கலாய்ப்பு
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் நட்பாகவும், ஜாலியாகவும் இருந்த நிரூப் மற்றும் பிரியங்கா தற்போது எதிரிகளை போல எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் டாஸ்க்களில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் அடுத்த நிமிடம் ஒன்றுமே நடக்காதது போல கூலாக மாறிவிடுகிறார்கள். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் தான் இவ்வளவு நாட்களாக கலாய்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் நேற்றைய எபிசோடில் ராஜு இதை கவனித்து பேசியிருக்கிறார்.

போட்டி பலமா இருக்கு
டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் எல்லாம் பார்க்க கூடாது. தங்களுடைய கருத்தை சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பதில் பிரியங்கா கவனமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அவருக்கு போட்டியாக நானும் சளைத்தவரல்ல என்று நிரூப் நிரூபித்துக் கொண்டு வருகிறார். நேற்றைய இந்த வார தலைவர் பதவிக்காக இவர்கள் இருவரும் மோதிக் கொண்ட நிகழ்ச்சியை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

கூட்டணி உடைஞ்சு போச்சு
இந்த சீசனின் ஆரம்பத்தில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் ஒரு கூட்டணியாக சேர்ந்து செயல்பட்டு வந்தனர். இது சக போட்டியாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களும் இதையேதான் கூறிக் கொண்டிருந்தனர். பிரியங்கா மாறிவிட்டார் என்று,ஆனால் தற்போது பிரியங்கா, அபிஷேக் வெளியே சென்ற பிறகு தன்னுடைய விளையாட்டை தனியாகவே விளையாட தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிரூப்பும் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் தொடங்கிவிட்டார். நான் விளையாட்டில் ஜெயிக்க தான் வந்து இருக்கிறேனே தவிர இங்கு எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டேன் என்று இவர் கூறியது போலவே தான் இப்போது செயல்பட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏன் இந்த வெறுப்பு
இந்த வார வீட்டின் தலைவராவதற்கு இவர்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். போட்டியாளர்கள் தங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று இவர்கள் வார்த்தையில் மோதிக்கொண்டது விளையாட்டுக்கு சுவாரசியத்தை கொடுத்துக் கொண்டிருந்தாலும், என்ன தான் பிரியங்கா மீது நிரூப்புக்கு இந்த அளவிற்கு வெறுப்பு என்று பிரியங்காவின் தீவிரமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வேறு எந்த போட்டியாளர்களின் மீதும் இல்லாத வகையில் பிரியங்காவின் மீது தன் வெறுப்பை அதிகமாக நிரூப் காட்டி வருகிறார் என்று நிரூப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications