உண்மையான வயதை கூறிய ரவீந்தர்... இது மகாலட்சுமிக்கு தெரியுமா?? நம்ப முடியாத ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சென்னை:பார்ப்பதற்கு சைஸ் தாங்க பெருசு... வயசு என்னமோ சிறுசு தான்... என்று தன்னுடைய வயதை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய உண்மையான வயதை குறித்து கூறியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.
சமூக வலைத்தள பக்கங்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் அதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமண மீம்ஸ்கள் அதிகமாக வலம் வருகிறது.
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமண புகைப்படங்களில் பல நெட்டிசன்கள் கேட்கும் கேள்வி, இருவருக்கும் இடையில் எவ்வளவு வயது வித்தியாசம் என்பதுதான். அதற்கு தற்போது நச்சென்று ரவீந்தர் கூறிய பதிலை கேட்டு நெட்டிசன்கள் வாயடைத்து போயிருக்கிறார்களாம்.

எந்தப் பக்கமும் இதே பேச்சுதானாம்
தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செய்திகள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பலரையும் ஆச்சரியப்பட வைத்துவிடும். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் திருமணம் பலருக்கும் வியப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் காதல் இருந்தாலும் அது திரைத்துறையில் இருப்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியாத வண்ணமாகவே இருந்த நிலையில் திடீரென்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சி தான். இந்த நிலையில் இருவருடைய திருமணத்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பல வதந்திகளும் பரவி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த விமர்சனம்
சினிமா தயாரிப்பின் மூலம் திரையுலகில் நுழைந்தாலும், சமூக வலைதளங்களில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் அதன் போட்டியாளர்கள் குறித்த விமர்சனங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர் தயாரிப்பாளர் ரவீந்தரன் அவர்கள். இவருடைய விமர்சனங்கள் பெரும்பாலும் யாரும் முகம் சுளிக்கா வண்ணம், ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்ததால் அவருடைய விமர்சனங்களுக்கு என்று தனி வரவேற்பு சமூக வலைதளங்களில் இருந்தது. தற்பொழுது விஜே ஆக இருந்து சீரியல் நடிகையாக மாறிய மகாலட்சுமி திருமணம் முடித்த இவர்களது திடீர் திருமணம் சமூக வலைதளங்களில் பலவிதமான வாழ்த்துக்களை மட்டும் இன்றி ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.

இதை எதிர்பார்க்கலையே
பிறரை பற்றி கூறும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் மூலம் பிரபலமான ரவீந்திரன் அவர்கள் தன்னுடைய திருமணமே இவ்வளவு விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்று தான் எதிர்பார்த்து இருந்ததாகவும், அந்த விமர்சனங்கள் எல்லாம் எவ்வாறெல்லாம் இருக்கும் என்றும் தனக்கு முன்பே தெரியும் என்றும் தனது திருமணத்திற்கு பின்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதனால் தான் தாங்கள் எல்லாவற்றிற்கும் தயாரான பின்பே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதான் உண்மையாம்
எல்லாவிதமான ட்ரோல்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்ததாக கூறும் ரவீந்திரன், வயது குறித்த விமர்சனங்களுக்கு இதைத்தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தானும் 90ஸ் கிட்ஸ் தான், நீங்கள் மகாலட்சுமியை டிவி யில் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் அவ்வளவுதான் வித்தியாசம்.மற்றபடி இணையதளங்களில் வலம் வருவது போல் எனக்கு 58,52 வயது இல்லை என்றும் 38 தான் ஆகிறது என்றும் தன்னுடைய உண்மையான வயதை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். இவரது விளக்கத்தைக் கேட்ட நெட்டிசன்கள் வயசாங்க முக்கியம் வாழ்க்கை தான் முக்கியம். சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications