
நிஜத்தில் பிக் பாஸுக்குள் இதுதான் நடக்கிறது.. நான் அப்படி நடந்துக்க காரணம்.. உண்மையை உளறிய குயின்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய குயின்சி அந்த நிகழ்ச்சியில் நடப்பதை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
போட்டியாளர்கள் அதிகமாக கோபப்பட்டு சண்டையிட்டு கத்துவது போன்ற சீன்கள் அதிகமாக காட்டப்படுவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி குயின்சி தற்போது கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் அதிகமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று நான் சம்பாதித்தது இதுதான் ஓபன் ஆக பேசிய குயின்சி...இப்படி உளறிட்டாரே!

அனைவருடைய பொதுவான கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு மன ரீதியான விளையாட்டு தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பலரும் இதுவெல்லாம் சுஜிபி நாங்கள் சென்றால் அப்படி இருப்போம் இப்படி இருப்போம் என்று கூறினாலும் உள்ளே சென்ற பிறகு தங்களுக்கு உடைய விளையாட்டை வழக்கம் போலத்தான் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய குயின்சி இந்த நிகழ்ச்சியை பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார். அதில் உள்ளே எந்த என்டர்டைன்மெண்டும் இல்லாமல் இருப்பதால் அனைவருமே ஒரு விதத்தில் மன அழுத்தத்தில் தானாக தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

சண்டை ஏற்பட காரணம்
அது மட்டுமல்லாமல் டாஸ்க் விளையாடும் போது தான் ஒருவரை பற்றி தாங்கள் நினைத்திருக்கும் மொத்த கருத்தையும் கூறுவார்கள். அதுவரைக்கும் முகத்துக்கு நேராக ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென இப்படி நடந்து கொள்கிறார்களே என்று ஏமாற்றத்தை பலராலும் தாங்கிக்க முடியாது. அதனால அடுத்த நேரங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு விடுகிறது. இங்கே இந்த வீட்டை தாண்டி வெளியே எந்த ஒரு சிந்தனையும் சென்று விடாத வகையில் தான் அனைவருமே பார்த்த முகங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு வீட்டுக்குள்ளே வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றனர். வெளியே குடும்பத்தை நினைத்து விட்டால் உள்ளே இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

அலர்ஜி ப்ராப்ளம்
அனைவரும் தங்களை ரசிகர்களிடம் நல்ல முறையில் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து தான் விளையாடி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் உள்ளே இருக்கும் சூழ்நிலையிலும் பலருடைய உடல்நிலை சரி இல்லாமல் போகும்போது அடுத்தவர்களோடு கோபப்பட தான் செய்கிறார்கள். எனக்கு கூட ஏற்கனவே அலர்ஜி பிராப்ளம் இருக்கிறது. என்னுடைய பர்சனல் டாக்டர்ஸ் நான் உள்ளே செல்லும்போது எனக்கு நேரடியாக என்னை பார்க்க முடியாது என்பதால் ஹெவி டோஸஸ் உள்ள மருந்துகளை கொடுத்து அனுப்பி இருந்தனர். நான் அதை எடுத்துக் கொண்டதால் எனக்கு முகமும் உதடு எல்லாம் வறண்டு போய்விட்டது. அதனாலே நான் அடிக்கடி உதட்டை ஈரமாக்கி கொண்டு இருந்தேன் . இதைக் குறித்து வெளியே வந்ததும் என்னுடைய அம்மா முதல் கேள்வியாக கேட்டார்கள். எதற்காக இதுவரைக்கும் இல்லாத புது பழக்கத்தை அங்கே செய்கிறார் என்று எங்க அம்மா கேட்ட கேள்விக்கு பிறகு தான் எனக்கே தெரிந்தது. நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று எனக் கூறியிருக்கிறார்.

வெளியே காட்டப்படும் விதம்
ஆரம்பத்தில் அதிகமானோர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது அனைவரும் அங்கு இருக்கும் ஒரு சில டாய்லெட்டை தான் பயன்படுத்திக் கொண்டனர். அதுபோல டாஸ்க் விளையாடும் போது டாஸ்கிலும் கவனத்தை செலுத்த வேண்டும். அதுபோல நம்முடைய டீம் செய்ய வேண்டிய வேலைகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும். இதனாலே பலருக்கு கோபம் தான் ஏற்படும். குறிப்பாக சமையல் அணியில் இருப்பவர்கள் சமையல் செய்து கொண்டே கூட டாஸ்கில் கவனத்தை செலுத்துவார்கள். எனக்கு கைகளில் அலர்ஜி இருந்ததால் பாத்திரம் கழுவும் போது எனக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அங்கே சின்ன சண்டை நடந்தால் கூட வெளியே மியூசிக் எல்லாம் போட்டு வேறு விதத்தில் காட்டப்படுகிறது. டாஸ்க் நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசினாலும், அடுத்த நிமிடம் சமாதானமாக பேசி விடுவோம் என்று பேசி இருக்கிறார்.