அப்படி இருந்து இப்படி மாறிய ரச்சிதா...யார் என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள்
சென்னை: எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன் என்று சொல்வது போல குழந்தைப்பருவ போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.
எத்தனையோ போட்டோக்களில் இவரை பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக குழந்தை பருவத்தை பார்த்ததும் குதூகலிக்க தான் செய்கின்றார்கள்.
பிறந்த நாள் முதல் இன்றுவரை என்று இவர் விதவிதமாக வெளியிட்ட போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.

கலக்கல் கதாநாயகி
வெள்ளித்திரை கதாநாயகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் அதிக ரசிகர்களை தனது படை பட்டாளமாக வைத்திருக்கும் ரச்சிதா இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அழகே பொறாமைப்படும் பேரழகியாக இவர் விதவிதமாக வெளியிட்ட போட்டோஸ்கள் சக்க போடு போட்டு வருகிறது. இவர் எத்தனையோ போட்டோஸ்களை வெளியிட்டிருந்தாலும் அது எல்லாம் கூட ரசிகர்கள் மத்தியில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த குழந்தைப்பருவ போட்டோக்கள் தான் யாரு இவரு என்று அதிகமாக ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறது.

விஜய் டிவியின் மீனாட்சி
விஜய் டிவியின் செல்ல கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரச்சிதா அவருடைய பெயரைச் சொன்னால் ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு தெரியாவிட்டாலும் சரவணன் மீனாட்சி, மீனாட்சி என்று சொன்னாலே டக்கென்று தெரிந்துவிடும். அந்த அளவிற்கு அந்த ஒரு பெயரில் பல வருடங்களாக விஜய் டிவியை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். தற்போதும் கூட மகாலட்சுமி என்ற மகாவாக விஜய் டிவியில் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். இவர் எத்தனையோ சீரியல்களில் நடித்து இருந்தாலும் முதல் முதலில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியல் மூலமாக தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

கருப்பு தேவதை
முதல் சீரியலில் இவர் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் கிராமப்புற ரசிகர்களையும் ரொம்பவே கவர்ந்து விட்டார். ஆனால், இவருடைய உண்மையான அழகினை அந்த சீரியலில் தெரியாததால் பலர் அந்த சீரியலில் நடித்தது இவர்தானா என்று அதிசயமாக தான் கேட்டு வருகிறார்கள். கருப்பு தேவதையாக முதலில் களம் இறங்கிய இவர் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதலில் தன்னுடன் நடித்த கதாநாயகனை தன்னுடைய வாழ்க்கையின் கதாநாயகனாக மாற்றி விட்டாலும் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தனர். கொராணா ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டு விட்டது. இது ரசிகர்கள் மத்தியில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

கண்ணு பட போகுது
தற்போது இவர் நாம்இருவர்நமக்குஇருவர் சீசன் இரண்டில் மகா கேரக்டரில் மிர்ச்சி செந்திலுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பாக பரவி கொண்டிருந்தது. உண்மையில் இவர் கன்னட படம் ஒனறில் நடிக்க இருப்பதால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டு நீங்க எல்லாம் இப்படியே சொல்லி சொல்லியே என்ன அனுப்பி வைத்து விடுவீங்க போல என்று நக்கலாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இதை பார்த்த பின்புதான் அப்போ இவர் உண்மையில் சீரியலை விட்டு போகவில்லை என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் தற்போது புல்லட்டில் சுத்தும் லேட்டஸ்ட் கெட்டப் வரைக்கும் இருக்கும் போட்டோக்களை வைத்து ஒரு வீடியோ எடிட் பண்ணி இருக்கிறார். அந்த வீடியோவை இவர் வெளியிடவும் ரசிகர்கள் பார்த்து பரவசமடைந்து கொஞ்சி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications