அப்படி சொல்லி சொல்லியே போக வச்சிருவீங்க போலயே..ரச்சிதா உருக்கம்..ரசிகர்கள் தவிப்பு
சென்னை: ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் கேள்விக்கு உருக்கமான பதிலை அளித்து ரசிகர்களை தவிப்பில் அளித்து விட்டார் ரச்சிதா.
பழைய நினைவுகளை மீண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர் ஏக்கமாக, இலைமறை காயாக பேசியிருப்பதை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இவர் பேசியதை வைத்து பார்க்கும்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்றுதான் பலர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மகாவுக்கு வாய்ப்பு குறைஞ்சு போச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் மாயன் மகா ஜோடி மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மாறனின் என்ட்ரியால் கதைக்களமே மாறிவிட்டது. மாறனின் வருகையால் இந்த சீரியலில் புது திருப்பங்கள் ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகவும் ஒரு சில நேரங்களில் ஆறுதலாகவும் இருக்கிறது. மாறனும், மாயனும் ஒன்றாக பார்த்ததும் அண்ணன் தம்பிகள் பாசத்தை உருகியதை பார்த்ததும் சீரியலில் இனி பாச காட்சிகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

காதல் கண்ணில் தெரியுது..
ஏற்கனவே இந்த சீரியலில் முத்துராசுவை கொன்னது யாரு என்று முழுமையாக கண்டுபிடிக்க முடியாமலும், முத்துராசுவின் உடலை தேடாமல் கதையை சவ்வு போல இழுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் மகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ரச்சிதாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இல்லை என்று அவருடைய ரசிகர்கள் ஃபீல் பண்ணி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போதைய எபிசோடுகளில் மீண்டும் ரச்சிதாவுக்கு நடிப்பை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாறன் மாயனை மிரட்டி உனக்கு இனி நான் தான் எதிரி என்று கூறும்போது மாயனுக்கு சப்போர்ட்டாக மாறனிடம் கெத்தாக பேசும் வசனங்கள் ரச்சிதாவின் ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறது.

வெள்ளி திரையிலும் கதாநாயகி
ஏற்கனவே இந்த சீரியலில் ரச்சிதா தொடர்ந்து நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர் புதிதாக கன்னடம் திரை படத்தில் கமிட்டாகி இருப்பதால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க மாட்டாரோ என்று ரசிகர்கள் பயந்து கொண்டிருந்தனர். ஆனால் இவர் இப்ப வரைக்கும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சீரியலில் பிசியாக இருப்பது போலவே ரச்சிதா சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவர் தினமும் எடுக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி பதிவிடும் போது அவரிடம் அதிகமான ரசிகர்கள் சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா இல்லையா என்றுதான் கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் கூறாமல் இருந்து வந்து கொண்டிருந்தார்.

முடிவு என்ன சொல்லுங்க
இந்த நிலையில் ரச்சிதா தற்போது ஒரு வீட்டில் தூணில் சாய்ந்தபடி பெருமூச்சு விட்டிருக்கும் இவரை பார்த்து பலபேர் என்னாச்சோ ஏதாச்சோ என்று இவருடைய கேப்ஷனை படித்து வருகின்றனர். அதில் அவர் அதே வீடு, அதே தூண், அதே மாடி..எதுவும் மாறவில்லை என்று சோகமான இமேஜ்களை போட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நான் எங்கேயும் போகவில்லை இங்கே தான் இருக்கேன்..ஆனா இல்லப்பா!..என்று எஸ் ஜே சூர்யாவின் காமெடியை நினைவுபடுத்தி இருக்கிறார். விட்டுட்டு போறாங்க என்று சொல்லி சொல்லியே போக வச்சிருக்கீங்க போலயே!..நமக்கு அடி ஒன்னும் புதுசு இல்லையே, பார்ப்போம் என்ன தான் நடக்குனு. சப்போர்ட் பண்ண தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடக்கும் என்று பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்தக் கேப்ஷனுக்கு ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் என்று ஆதரவு அளித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சீரியலை விட்டு போய்விடாதீர்கள் என்று பலர் பேசியும் வருகின்றனர். பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் இதில் என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்களும் பொறுமையாக இருக்க ஆரம்பித்து விட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications