ராஜா ராணி சீரியலை விட்டு விலக போகிறாரா ஆலியா...ஜீ தமிழ் ஹீரோயினி களமிறக்கமா?? எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2வில் ஆலியா மானசா விற்கு பதிலாக ஜீ தமிழ் கதாநாயகி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வைரலாக பரவி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசா இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க மாட்டாரா? ?என்று அவருடைய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆலியா மானசா இந்த சீரியலில் மாற்றப்பட மாட்டார் என்று ஏற்கனவே இயக்குனர் கூறியிருக்கும் நிலையில் தற்போது வலம் வரும் போட்டோக்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற மொழி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது சீசனும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் ஏற்கனவே வேறு மொழிகளில் ஒளிபரப்பான சீரியலாக இருந்தாலும் அதனை தமிழ்மொழியில் புது கோணத்தில் எடுத்து ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். இதில் சந்தியா கேரக்டரில் ஆலியா மானசா நடித்துவருகிறார். ஏற்கனவே முதல் பாகத்தில் செம்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நிஜக் காதலர்கள் ஆக மாறிய ஜோடி
முதல் பாகத்தில் செம்பா மற்றும் கார்த்தி இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலர் அசந்து போயிருந்தனர். ரசிகர்களின் பலருடைய வார்த்தை இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியது போலவே ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராதவதமாக இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. ஆனால் இது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

இரண்டாவது முறையாக ஆலியா கர்ப்பம்
திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் ஆலியா மானசா மீண்டும் உடலை குறைத்து இந்த இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ரெடியாகி இருந்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ரசிகர்களின் பெருத்த ஆதரவோடு இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா??இல்லையா??என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் சீரியல் டீம் இந்த சீரியலில் இவர்தான் தொடர்ந்து நடிப்பார் என்று கூறியிருந்தனர்.

வைரலாகும் படங்கள்
தற்போது சீரியலில் ஆலியா மானசா தன்னுடைய கணவர் வெற்றிக்காக அவரை சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்து, தற்போது வெற்றியும் அடைய வைத்துவிட்டார். இந்த நிலையில் இனி இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கப்போவது ஆலியா மானசா இல்லை அவருக்கு பதிலாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் ஷபானா என்று செய்திகள் மட்டும் அல்லாமல் ஒரு சில படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது நம்பத் தகுந்ததாக இல்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications