நம்மை போல அண்ணன் தம்பி யாரும் இல்லை... பாசத்தால் உருக வைத்த ராஜு, அமீர்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வந்த அமீர், ராஜுவிடம் இப்படி பழகுவார் என்று எதிர்பார்க்கவில்லையாம் ரசிகர்கள்.
சரத்குமார் முன்னிலையில் தன்னுடைய மனதில் இருப்பதை ராஜு வெளிக்காட்டி இருக்கிறார்.
அட பாசத்தால் அனைவரையும் ராஜுவும், அமீரும் பஞ்சர் ஆக்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைய இருக்கும் தருணத்தில் உள்ளது இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலருக்கும் பேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜு தற்போது நேற்றைய எபிசோடில் சரத்குமார் முன்னணியில் தன் மனதில் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டியுள்ளார். இதுவரைக்கும் இவரை பாசக்காரராகவும், காமெடியனாகவும் பல இடங்களில் ரசிகர்கள் பார்த்து இருந்தாலும் தற்போது அவரிடம் இவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தொடரும் பாச உறவுகள்
தன்னுடைய மனதிற்கு பிடித்தவர்களை மிகவும் நெருக்கமாக வைத்திருக்கும் ராஜு ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து அண்ணாச்சியிடம் மிக நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் அவர் திடீரென்று வெளியேறியதும் கண்கலங்கி கதறி அழுதுவிட்டார். இதுவரைக்கும் யாருடைய வெளியேற்றத்தின் போதும் அந்தளவு எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் வெளியே காட்டாமல் இருந்த ராஜு அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டார். அதற்கு பிறகு வைல்ட் கார்ட் வழியாக வந்த சஞ்சீவ் இடம் இவர் பாசமாக பழகி வந்தார். இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் வெளியேறிய நிலையில் அமீர் பற்றி அவர் பேசி இருப்பது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

இதயத்தை வழங்கிய ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் காட்சிகள் ரசிகர்களுக்கு காட்டப் படவில்லை என்றாலும் இதுவரைக்கும் ராஜு மற்றும் அமீர் இடையே இருக்கும் பாசத்தை அவ்வளவாக ரசிகர்கள் பார்த்ததில்லை. ஆனால் முதல்முறையாக ராஜு, அமீர் தான் இந்த வீட்டிற்குள் பாதியில் வந்திருந்தாலும் வந்தபிறகு யாரிடமும் அதிகமாக ஷேர் செய்யாத விஷயங்கள் என்னிடம் பேசி இருக்கிறான். என்னை ஒரு அண்ணனாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறார் அதனால் என்னுடைய இதயத்தை கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அண்ணனாக மாறிய ராஜு
ராஜுவின் பேச்சைக் கேட்டு அமீருடன் இப்படி எல்லாம் ஒரு உறவு இருக்கிறதா??என்று திகைத்துப் போயிருந்த ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமீர் பேசியது இருந்துள்ளது. ராஜுவை போன்றுதான் அவருடைய அண்ணனும் இருப்பாராம். தன்னுடைய அண்ணனின் ஜெராக்ஸ் தான் ராஜூ, அதனால் எனக்கு அவரை ரொம்பவே பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவர்களின் அண்ணன் தம்பி கூட்டணியை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு அமீருக்கு அதிகமாக ரசிகர்கள் உருவாகி இருக்கும் நிலையில் ராஜு மற்றும் அமீர் பாசத்தை பார்த்து பலர் வாழ்த்துக்கள் அனுப்பி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications