தாமரைக்கு பக்குவமாய் அறிவு சொன்ன ராஜூ...சுருங்கிப் போச்சு தாமரையின் முகம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரைக்கு பக்குவமாய் அறிவுரை கூறியிருக்கிறார் ராஜு.
ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே ராஜூ கூறியதும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
படபட பேச்சால் சில நேரங்களில் தாமரை செய்யும் செயல் ரசிகர்களை எரிச்சலடைய செய்து விடுகிறது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் அப்படி இருந்த தாமரை
தாமரையின் செயல் சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வெறுக்க வைத்து விடும் என்பதை கருதி அவருக்கு ராஜூ அறிவுரை கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த தாமரைச்செல்வி இந்த வீட்டை விட்டு நான் போகமாட்டேன் என்றும் என்னை அனுப்பி வைத்து விடாதீர்கள் என்று ரொம்பவும் வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சக போட்டியாளர்கள் இவரிடம் செய்யும் செயலை பார்த்ததும் இவர் வெறுப்படைந்து சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகிறார்.

வெகுளித்தனமான கேரக்டர்
ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் தாமரைச்செல்வி, இதுவரைக்கும் ஒரு சில பகுதிகளுக்கு பரிச்சயமான நபராக இவர் இருந்திருக்கிறார். தற்போது தமிழ் மக்களில் பலருக்கும் பரிச்சயமான ஒருவராக இவர் மாறினாலும் இவர் சில நேரங்களில் செய்யும் செயல்களால் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகிறார். இவருடைய பேச்சை பார்த்தும், நடவடிக்கைகளை பார்த்தும் பல ரசிகர்கள் இவர் வெள்ளந்தியான வெகுளி என்று இப்ப வரைக்கும் கூறிவருகின்றனர்.

படபடவென பேச்சு
இந்த சீசனில் அறிமுகமாகியிருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் களை பார்த்து நன்றாகவே ரெடியாகி தான் இந்த சீசனுக்கு வந்து இருக்கின்றனர். ஆனால் இவர் இப்படி அல்ல என்று இவருக்கு இவருடைய ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதுவும் தன்னுடைய படபடவென பேச்சால் மனதில் இருப்பதை கொட்டி தீர்த்து விடுகிறார்.

ராஜுவின் அறிவுரை
நேற்றைய பிக் பிக் பாஸில் போட்டியாளர்கள் இந்த வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு அறிவுரைகளும், சில டயலாக்குகளையும் கூறிவந்தனர். அதில் ராஜு தாமரை இடம் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதிகம் பிரபலமாகாத நீ இந்த இடத்திற்கு வந்து இருக்கிறாய். இது உன்னுடைய திறமையை நிரூபித்து உன்னைப்போல இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதில் சிறப்பாக செயல்படுவதற்காக தான் நீ உன் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபப்பட்டு கொண்டு பேசாதே என்று இவர் கூறிய அறிவுரையை கேட்டு தாமரையின் முகம் சுருங்கி போனாலும், ரசிகர்கள் நல்ல வார்த்தை தான் சொன்னீர்கள்...எங்கள் மனதில் இருப்பதை சொல்லி விட்டீர்கள் என்று ராஜூவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications