ராஜூ செய்த செயல்...ஃபீலான சிங்கிள்ஸ்
சென்னை: ராஜு மற்றும் அவருடைய மனைவியின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் உச்சு கொட்டி வருகின்றனர்.
பல நாட்களுக்குப் பிறகு பார்த்த மனைவியை வரவேற்ற விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாக காட்டிய ராஜுவை பார்த்து சிங்கிள்ஸ் ஃபீலாகி ஆகி உள்ளார்களாம்.

ஃப்ரீஸ் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்துவரும் ஃப்ரீஸ் டாஸ்க் மூலமாக போட்டியாளர்கள் செய்யும் செயல் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். என்ன தான் பிரீஸ் டாஸ்க் எப்போது வரும் என்று போட்டியாளர்களும், ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்போது நடக்கும் ஒரு சில சம்பவங்கள் பலருக்கும் பீல் பண்ண வைத்துவிடுகிறது. அதுவும் 90 கிட்ஸ்ஸை ரொம்பவே பாதித்து இருக்கிறதாம். ஆனாலும் இந்த ஒரு அழகான தருணம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

ராஜூ குடும்பத்தின் வருகை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர்களின் கேரக்டர் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்து விடுகிறது. அந்த வகையில் தற்போதைய சீசனில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த ஒரு போட்டியாளராக ராஜூ இருந்து வருகிறார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரசிகர்கள் ராஜூ மீது வைத்திருக்கும் பாசத்தால் இவருடைய குடும்பம் எப்போது வரும் என்று பார்த்துக் கொள்வதற்காக ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போதைய வாரத்தில் நிறைவேறியுள்ளது.

பிக் பாஸின் அதிரடி முடிவு
ரசிகர்கள் பலர் ராஜீவின் குடும்பம் கடைசியாகத்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். காரணம் அவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் அனைவருமே ஒருமித்த கருத்தோடு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தை கடைசியில் காட்டினால் தான் நன்றாக இருக்கும் என்று பிக்பாஸ் நினைக்கும் என்று ரசிகர்களே கூறிவந்தனர். ஆனால் ரசிகர்களின் கருத்து பொய்யாக்கும் விதமாக பிக்பாஸ் நடந்து கொண்டுள்ளது யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

90ஸ் கிட்ஸ் களின் கவலை
ஏற்கனவே 90ஸ் கிட்ஸ் பலர் தங்கள் இன்னும் திருமணம் முடியவில்லை என்று ஃபீல் பண்ணி கொண்டிருக்கும் நேரத்தில் ரியாலிட்டி ஷோவில் நேற்றைய எபிசோடில் ராஜூ நடந்து கொண்டதைப் பார்த்து பலர் மனம் வருந்தி உள்ளார்களாம். இவ்வளவு அழகான ஜோடி பொருத்தம் மட்டுமல்லாமல் காதலை வெளிப்படையாக காட்டிய விதமும் பலருக்கும் வெட்கத்தை வரச்செய்ய வைத்துள்ளது என்று கூறிவருகின்றனர். என்னதான் காமெடி நடிகராகவும் உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளதவறாக இருந்தாலும் தன்னுடைய காதல் மனைவியை பார்த்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications