பிறந்தநாளில் ரசிகர்களின் செய்கையால் திக்குமுக்காடிப் போன ரியோ... உருக்கமான செயல்
சென்னை: தன்னுடைய பிறந்த நாளில் ரசிகர்கள் செய்ததை நினைத்து ரியோ ராஜ் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகமாக சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரியோ .இவர் 2013ஆம் ஆண்டு சீரியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் .சன்மியூசிக் நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கியாகவும் பணிபுரிந்துள்ளார். கல்லூரி காலங்களில் இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

ரசிகர்களை கவர்ந்த சரவணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பலசீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் 2016 முதல் 2018 வரைக்கும் சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகம் ஒளிபரப்பாகி வந்தது .இந்த கதையில் சரவணன் கேரக்டரில் இவர் நடித்துள்ளார். மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பியதும் இவருக்கு அமோகமான வாய்ப்பு வரவேற்பு கிடைத்திருந்தது. ஒவ்வொரு சீசனிலும் உள்ள சரவணன் கேரக்டரை ரசிகர்கள் ரசித்ததுபோல இவருடைய கேரக்டரையும் ரசிகர்கள் நன்றாகவே ரசித்து வந்தனர். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களிலும் துணை நடிகராகவும், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார்.

கண்ணியமான அறிமுகம்
சத்ரியன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானதை தொடர்ந்து இவருக்கு, சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் நடித்த தன் மூலமாக 'கண்ணியமான அறிமுகம்' என்று இவர் விருதுகளை வாங்கியுள்ளார். அதற்குப் பிறகும் பிளான் பண்ணி பண்ணனும் என்னும் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் கொரானா காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் தான் இருந்து வருகிறது.

திகைக்க வைத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீண்டும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்துகொண்டதும் இவருடைய கலகலப்பான காமெடி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. ஒரு சில நேரங்களில் இவர் அர்ச்சனாவோடு சேர்ந்து குரூப்பாக செயல்படுகிறார் என்று சிலர் கூறி வந்தாலும், இவருடைய தனித்துவம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அதிகமான வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவருக்கு தொடர்ந்து வரும் வாழ்த்துக்கள பார்த்து திகைத்துப் போய் இருக்கிறார்.

எதிர்பாராத மகிழ்ச்சி
இதுவரைக்கும் எந்த ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிகமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனக்கு வந்துள்ளதாகவும், இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இவருடைய போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தனது வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கு இவரும் மறக்காமல் நன்றிகளைக் கூறி அனுப்பி வருகிறார். சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக செய்யும் செயல் இவருக்கு மேலும் அதிகமான ரசிகர்களை கொடுக்கும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications