மகாசிவராத்திரி நாளில் பக்தி மயம்... ரோஜா சீரியல் நடிகை எந்த கோவிலுக்கு போனாங்க தெரியுமா?
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை மகாசிவராத்திரி நாளில் பக்திமயமாக கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
சென்னை: மகாசிவராத்திரியை நாடு முழுவதும் எல்லோரும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில் சினிமா, சீரியல் பிரபலங்களும் தங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டுள்ளனர். ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரியும் கோவிலுக்கு சென்று பக்தி மயத்தோடு வழிபட்டிருக்கிறார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல்தான் இப்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 1ஆக இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரோஜா சீரியலில் ஹீரோ அர்ஜூனாக சிபு சூரியன் நடிக்க ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா நல்காரி. இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.
சீரியலில் நடித்த நேரம் போக மீதி நேரமெல்லாம் சோசியல் மீடியாவில் நேரத்தை செலவிடுகின்றனர். தங்களின் அன்றாட நடவடிக்கைகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகிறார் ரோஜா பிரியங்கா நல்காரி.

தமிழ் டிவி சேனலில் நம்பர் 1
தமிழில் விஜய், சன், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் தினசரியும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்களின் தரத்தை டிஆர்பிதான் நிர்ணயிக்கிறது. அதில் எப்போதுமே டாப் 5க்குள் ரோஜா சீரியல் இருந்து வருகிறது. இப்போது நம்பர் 1 இடத்தை ரோஜா பிடித்துள்ளது.

புதிய களம்
அர்ஜூன் குடும்பத்தில் இருந்து கொண்டே குழி பறிக்கும் அனு, ரோஜாவின் உயிரை பறிக்கத் துடிக்கும் சாக்ஷி என இரண்டு வில்லிகள் இருந்த நிலையில் தற்போது நீலாம்பரி என்ற புது வில்லி கடந்த சில எபிசோடுகளாக வருவதால் கதையின் போக்கு மாறியுள்ளது. கதையில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டி ஆள்கிறது ரோஜா.

ரோஜா உயிருக்கு ஆபத்து
நீலாம்பரியால் ரோஜா உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த அர்ஜூன் கூடவே அனுவை தனது வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். என்ன படித்தார் என்றே இதுவரை சொல்லாத நிலையில் திடீரென வக்கீல் ஆகி கருப்பு கோட் மாட்டிக்கொண்டு கோர்ட்டில் போய் வாதாடுகிறார் அனு. அதுவும் அர்ஜூனுக்கு எதிராக வாதாடும் ஜெயசீலனின் அசிஸ்டெண்ட் ஆகவும் சேர்ந்து கொண்டு ரோஜாவிற்கு கெடுதல் செய்கிறார்.

டூர் போன ரோஜா
சீரியலில் ஏகப்பட்ட வில்லிகளை சந்திக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு டூர் சென்று வருகிறார் ரோஜா, அப்படித்தான் சமீபத்தில் தனது கனவு தேசமான காஷ்மீருக்கு போய் வித விதமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்தார் பிரியங்கா. பனியோடு விளையாடி தால் ஏரியில் பயணம் சென்று விட்டு உற்சாகமாக திரும்பி வந்தார் ரோஜா பிரியங்கா.

பட்ட பாட்டிற்கு பலன்
ரோஜா சீரியல் முன்பு டல் அடித்த நிலையில் தற்போது மீண்டும் டாப் கியரில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 1100 எபிசோடுகளை எட்டப்போகும் ரோஜா டிஆர்பியில் டாப் 1 என்ற நிலையை எட்டியுள்ளதால் சீரியல் இன்னும் சில காலத்திற்கு ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பிடித்தமான நாயகியாக உள்ள ரோஜா அவ்வப்போது கோவிலுக்கும் போய்வருகிறார்.

தீவிர கடவுள் பக்தி
பிரியங்கா அவ்வப்போது மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு போய் பய பக்தியோடு சாமி தரிசனம் செய்து விட்டு வருவார். மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வீட்டில் காலையிலேயே எழுந்து பூஜை செய்து விட்டு பய பக்தியோடு கோவிலுக்கு போய் விநாயகப்பெருமானையும் சிவபெருமானையும் தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார். கடவுளுக்கு நன்றி சொன்ன கையோடு அதை ரீல்ஸ் ஆகவும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications