ரூ.300 கோடி நடிகரின் பண்ணை வீட்டில் ஒலித்த தக் லைஃப்? பலிகடா ஆக்கப்பட்ட பிறவி கலைஞன் சிம்பு: பிரபலம்
சென்னை: மாநாடு படம் செய்தபோது, வெங்கட்பிரபுவும், சிம்புவும் கலந்து பேசிக் கொண்டார்கள்.. நட்பு ரீதியாக டிஸ்கஸ் செய்து கொண்டனர்.. ஆனால் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு அந்த வாய்ப்பு இல்லை.. ஆளுமை மிக்க மணிரத்னம் படத்தில் சிம்புவால் கருத்து சொல்ல முடியாது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Public Wing என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, தக் லைஃப் படத்தில் சிம்புவின் கேரக்டர் கிளியராக டிசைன் செய்யப்படவில்லை.. நன்றாக நடித்திருக்கிறார்.. நன்றாக சண்டையும் செய்திருக்கிறார். எனினும் அவரது கேரக்டர் புரியவேயில்லை.

சிம்பு கேரக்டர்
ஏற்கனவே மணிரத்னம் படமான செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்ததால், தக் லைஃப் படத்திற்கும் சிம்புவிடம் பேசப்பட்டது. ஆனால், தன்னுடைய கேரக்டர் மிகவும் சிறியதாக இருப்பதாக சொன்னாராம். இதற்கு பிறகே கமல், மணிரத்னம் இருவரும் பேசி சிம்புவின் கேரக்டரை பெரிதாக்கினார்கள்..
அந்தவகையில் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம், கமல் மட்டுமே ஹீரோவாக நடித்து எடுக்க வேண்டிய படத்தை, 2 நடிகர்களாக நடிக்கும் சூழல் வந்ததால், கதையில் மாற்றம் செய்யப்பட்டதுதான்..
படம் ரிலீசுக்கு முன்பேயே 200 கோடி Table Profit செய்தும், பட ரிலீசுக்கு பிறகு லாபத்தை பெரிதாக தரவில்லை.. தக் லைஃப் படமானது, முதல்நாள் கலெக்ஷனே மோசமாகிவிட்டது.. அதிலும் இந்தியன் 2 முதல் படத்தைவிட இதில் மிகவும் குறைவாகிவிட்டது.. இப்போது தக் லைஃப் சோஷியல் மீடியாவில் டிரோல் செய்யப்பட்டு வருவதாலும், வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது..
உத்தண்டி வீடு
மறுநாள் படம் ரிலீஸ் என்றால், அதற்கு முந்தின நாள்தான் இப்படத்தை கமல், சிம்பு பார்த்துள்ளனர்.. கமல்ஹாசனின் வீடு உத்தண்டியில் உள்ளது.. அந்த வீட்டிலுள்ள தியேட்டரில்தான் இப்படத்தை கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்து பார்த்துள்ளனர்..
ஆனால் சிம்பு வேறொரு இடத்தில் படத்தை பார்த்துள்ளார்.. ஆனால், உடனே துபாய்க்கு கிளம்பி சென்றுவிட்டார்.. மனதில் கோபம் இருந்ததா? வருத்தமா? சரியில்லாத படத்தை தந்துவிட்டார்களே என்ற கோபம் இருந்ததா? தெரியவில்லை.. துபாய்க்கு கிளம்பி சென்றுவிட்டார்.
டி.ராஜேந்தர் எப்படி பன்முக கலைஞரோ அதுபோல சிம்புவும் எல்லாவிதமான விஷயத்தையும் சினிமாவில் செய்யக்கூடியவர்.
பலிகடா ஆக்கப்பட்ட சிம்பு
மாநாடு படம் செய்தபோது, வெங்கட்பிரபுவும், சிம்புவும் கலந்து பேசிக் கொண்டார்கள்.. நட்பு ரீதியாக டிஸ்கஸ் செய்து கொண்டனர்.. ஆனால் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு அந்த வாய்ப்பு இல்லை.. ஆளுமை மிக்க மணிரத்னம் படத்தில் சிம்புவால் கருத்து சொல்ல முடியாது. மணிரத்னம் சொல்வதை நடிக்கக் கூடியவராக மட்டுமே இருந்தார்..
கமல் இந்த படத்தில் பலிகடா ஆக்கப்பட்டாரா தெரியவில்லை, ஆனால், சிம்பு பலிகடாவாக்கப்பட்டுள்ளார்..
கானத்தூர் வீடு
2 மாதங்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் பேசும்போது , கமலின் கானத்தூர் வீடு குறித்து பேசியிருந்தார்..
அதில், "கமல் ஒரு பிறவிக்கலைஞன். பிறவிக்கலைஞர் என்று சிவாஜிக்கு அடுத்தபடியாக கமலைத்தான் சொல்கிறோம். 200 கோடி சம்பளம் வாங்குபவர்களுக்கு, தற்போது 300 கோடியில் வீடு என்பது சாதாரண விஷயம்..
தன்னுடைய அந்திம காலத்தில் மகள்களுடன் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக, சொந்தமாக பிரம்மாண்டமான வீட்டை கானத்தூர் கடற்கரையில் பண்ணை வீடாக மாற்றி கட்டிக் கொண்டிருக்கிறார் கமல். 70 வயது ஆனபிறகுதான் பண்ணை வீட்டு ஆசையை நிறைவேற்றி கொண்டுள்ளார்.. ஆனால் 300 கோடிக்கு வீடு என்று சொல்வதெல்லாம் அதீத கற்பனை" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமல்ல கமல்ஹாசன் தற்போது தாக்கல் செய்துள்ள தன்னுடைய வேட்பு மனுவில், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளதாக பதிவு செய்துள்ளார்.இதில், ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 4 வணிகக் கட்டிடங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications