சோகத்தின் மறு உருவமாய் சஞ்சீவ்.. வெளியே வந்த முதல் நாளே இப்படி அக்கப்போரா??
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியிட்டு வெளியே வந்த சஞ்சீவ் வெளியிட்ட போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி விடுகிறது.
வெளியே வந்த முதல் நாளே இப்படி ஒரு அக்கப்போரா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
சஞ்சீவ் அருகே சிரித்தபடி பிக்பாஸ் பிரபலங்கள் அமர்ந்து இருக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது 6 போட்டியாளர்கள் தான் உள்ளே இருக்கின்றனர். இதில் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தனர். அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக சஞ்சீவ் இருந்து வந்தார். இவர் போட்டியாளராக உள்ளே நுழைந்தபோது ரசிகர்கள் பலர் இவர் ஆரம்பத்தில் வந்திருந்தால் நிகழ்ச்சி நன்றாக இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

சரவெடி சஞ்சீவ்
பல நேரங்களில் சஞ்சீவ் பேசும் வார்த்தைகள் சர வெடியை போன்று அதிரடியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதனாலே அவருக்கு சரவெடி சஞ்சீவ் என்று பலர் பட்டங்களையும் கொடுத்துவிட்டனர். சமூக வலைத்தளத்தில் கூட இவருடைய ரசிகர்கள் சரவெடி சஞ்சீவ் என்று இவருக்காக பேன்ஸ் பேஜ் ஓபன் செய்து வைத்துள்ளனர். அவருடைய ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகளை ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களில் வெளியீட்டு பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் நண்பன்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கதாநாயகனாகவும் நடிகர் விஜய்யின் நண்பனாகவும் பலருக்கும் பரிச்சயமான சஞ்சீவ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கேள்விப்பட்டதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுவும் பல ரசிகர்கள் விஜய் பெயரை சொல்லி இந்த வீட்டில் அதிக நாட்கள் இருந்து விடுவார் என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறி வந்தனர். ஆனால் இங்கே விளையாட்டு வேற மாதிரி இருக்கிறது என்பது தற்போது புரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.

திடீர் சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு தற்போது 13வது போட்டியாளராக வெளியேறி இருக்கும் சஞ்சீவ் வெளியே வந்த முதல் நாளே கடந்த வாரம் வெளிவந்த அக்ஷரா மற்றும் வருணை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரையும் நெஞ்சில் அணைத்தபடி சஞ்சீவ் வெளியிட்ட போட்டோஸ்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சஞ்சீவ் டல்லாக இருந்தாலும் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் பிரைட்டாக சிரித்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ் வெளியேற்றத்தால் இவர்கள் இருவருக்கும் செம சந்தோசமா??என்று கலாய்த்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications