அண்ணாச்சிக்கு அட்வைஸ் கொடுத்த சஞ்சீவ்...ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: அண்ணாச்சி நிரூப்பிடம் நடந்துகொள்ளும் முறை தவறு என்று நேருக்கு நேராக சஞ்சீவ் அறிவுரை கூறியிருக்கிறார்.
சில நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் தவறு என்பது தனக்கே தெரியாது என்பதை சுட்டிக்காட்டிய சஞ்சீவ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
அதுவரைக்கும் விடாப்பிடியாக இருந்த போட்டியாளர்கள் சஞ்சீவின் பேச்சை கேட்டதும் கொஞ்சம் அமைதியாக மாறியது பார்க்கும் ரசிகர்களுக்கு மரியாதை கூடியிருக்கிறது.

எந்த பக்கம் கவனிக்க என்று தெரியவில்லை
இதுவரைக்கும் ஒரு சில நேரங்களில் தான் பிரச்சனைகள் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அடிபிடி சண்டை மட்டும் தான் நடக்கவில்லை மற்றபடி கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் வேற லெவல் தான் வெடித்துக் கொண்டிருந்தது. இதில் யார் பேச்சை கவனிக்க என்று ரசிகர்கள் புலம்புகின்ற மாதிரிதான் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் குரலை உயர்த்தி படபடவென வார்த்தைகளை கொட்டி கொண்டிருந்தனர்.

இது ஆச்சரியம்தான்
தாங்கள் சொல்லும் கருத்துகளில் விடாப்பிடியாக இவர்கள் இருந்ததை பார்த்ததும் இதில் யாருக்கு சப்போர்ட் பண்ண என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர். ஆனால் தான் புதியதாக இந்த வீட்டிற்குள் வந்தாலும் தவறு என்று தெரிந்தால் அதை முகத்துக்கு நேராக சுட்டிக் காடடி விட வேண்டும் என்று சஞ்சீவ் நிரூபித்திருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் சொல்வதுதான் சரி என்று போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தில் விடாப்பிடியாக இருக்கும் நேரத்தில் சஞ்சீவின் கருத்துக்கு எந்த போட்டியாளரும் எதிர்கருத்து பேசாதது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்துவருகிறது.

ஆமாம் பயந்துட்டேன். ..
இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்கில் இமான் அண்ணாச்சி ஜெயித்து தலைவர் பதவியில் இருக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் நிரூப் தனது காயினை யூஸ் பண்ணி இந்த வார தலைவர் பதவியில் நான் இருக்கிறேன் என்று சொன்னதும் இமான் அண்ணாச்சியால் ஏற்றுக்கொள்ள முடியாமல், நீ அப்போ பயந்துட்டியா??என்று கேட்டுக் கொண்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அண்ணாச்சிக்கு ஆதரவாக ஒரு சில போட்டியாளர்களும் நிரூப்பிடம் அதே வார்த்தையைத் தான் கேட்டுக்கெண்டிருந்தனர். அதனால் ஆமாம் நான் பயந்து விட்டேன். அதனால் எனக்கு இருக்கும் பவரை இந்த முறை யூஸ் பண்ணலாம் என்று நினைக்கிறேன் என்று கூறி அந்த பிரச்சனையை அதோடு முடித்து விட்டார்.

எடுத்துக்கூறிய சஞ்சீவ்
அண்ணாச்சி இந்த மாதிரி ஒரு வார்த்தையை பேசியது பிரியங்கா அபிஷேக் ஒரு என ஒருசில போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பது அவர்களுடைய நடவடிக்கை மற்றும் பேச்சுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் யாருமே அண்ணாச்சியின் முகத்துக்கு நேராக தங்களுடைய கருத்தை கூற தைரியமில்லாமல் தான் இருந்து வந்தனர். ஆனால் அண்ணாச்சிக்கு சப்போர்ட் செய்துகொண்டிருந்த ராஜு, சிபி, வருண் அனைவரிடமும் நிரூப் செய்தது சரி தான். ஆனால் அண்ணாச்சி இந்த வார்த்தையை கேட்டு இருக்கக்கடாது என்று தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அண்ணாச்சியின் முகத்துக்கு நேராக தனது கருத்தை கூறிவிட்டார். இதை பர்த்த ரசிகர்கள் சஞ்சீவ்க்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications