நான் செத்து பிழைத்து வந்து இருக்கிறேன்! இன்னும் சில நாளில் உண்மை தெரியும்! உருக்கமாக பேசிய செல்வராகவன்
சென்னை: இயக்குனர் செல்வராகவன் அவருடைய இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை பிரிய போவதாக நேற்றிலிருந்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் பேசிய வீடியோவும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்தது பலர் செல்வராகவனுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
சினிமா துறையில் யார் விவாகரத்து செய்தாலும் அதில் நடிகர் தனுஷ் பெயரை இழுத்து கமாண்ட் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். தனுஷ் தன்னுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு சமீப காலமாகவே இது போல தான் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷுக்கு பிறகு சினிமா துறையில் அடுத்தடுத்து பல விவாகரத்துகள் நடந்து விட்டன. அதிலும் ஒரு சில தம்பதிகள் தாங்கள் விவாகரத்தாக போகிறோம் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்த தங்கள் துணையுடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருக்கிறார்கள்.

இது போல பிரபலங்கள் போட்டோக்களை டெலிட் செய்ததும் அது பரபரப்பை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் அந்த பிரபலங்கள் நாங்கள் பிரியப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு சிலர் நாங்கள் மனம் ஒத்து பிரிகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்தில் இப்போது செல்வராகவன் பெயரும் சிக்கி இருக்கிறது. செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் சில வருடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
அதற்குப் பிறகு மயக்கம் என்ன படத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி உடன் இயக்குனர் செல்வராகவனுக்கு பழக்கம் ஏற்பட, முதலில் நட்பாக தொடங்கிய இவர்களுடைய பயணம் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார்கள். அடிக்கடி போட்டோ ஷூட் வீடியோக்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார்கள். சில நேரங்களில் செல்வராகவன் தத்துவமாக பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருப்பார். நிலைமை இப்படி இருக்க, இப்போது கீதாஞ்சலி மற்றும் செல்வராகவன் இருவருமே தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்த ஜோடியாக எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவரும் பிரிய போகிறார்களா என்ற கேள்வி நேற்றிலிருந்து பரவி வருகிறது. இந்த செய்திகளை கேட்டதும் செல்வராகவனின் பழைய பேட்டி ஒன்றை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த பேட்டியில் செல்வராகவன் மன வலியுடன் பேசி இருக்கிறார். அதில், நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து தப்பி வந்து உட்கார்ந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று சொல்லலாம் என உருக்கமாக பேசியிருக்கிறார்.
மேலும் மன உளைச்சலோடு பேசி இருந்தார். இதற்கு காரணம் என்ன என்று இப்போது சொல்ல மாட்டேன் ஆனால் எப்படியும் இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தெரியும் என்று அந்த வீடியோவில் செல்வராகவன் பேசியிருக்கிறார். இதனால் இவர் இப்படி பேசியது கூட செல்வராகவனின் இரண்டாவது மனைவி பிரிவதை பற்றி தான் இப்படி பேசினாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் செல்வராகவன் விவாகரத்து சர்ச்சையிலும் வழக்கம் போல தனுஷ் தான் காரணம் என்று சிலர் கமெண்ட் போடுவதையும் பார்க்க முடிகிறது. ஏற்கனவே தன்னை பற்றி இதுபோன்று சர்ச்சைகள் பரவி வருவதற்கு தனுஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் யார் விவாகரத்து செய்தாலும் தனுஷ் காரணம் என்று சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications