Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ராஜ்கிரண் மகளை திருமணம் செய்த சீரியல் நடிகர்..? பேஸ்புக் காதலா..!!??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜ்கிரனின் மகளை சன் டிவி நாதஸ்வரம் சீரியலில் சம்மந்தம் கேரக்டரில் நடித்து வந்த முனீஸ் ராஜா திருமணம் செய்துள்ளார் என்ற செய்திகள் தற்போது பரவி வருகிறது.

சீரியல் நடிகரும் நடிகர் சண்முகராஜனின் தம்பியுமான முனீஸ் ராஜாவின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

முனீஸ் ராஜாவின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது திருமணத்திற்கு முனீஸ் ராஜாவின் வீட்டில் சம்மதித்து விட்டார்களாம். ஆனால் ராஜ்கிரன் வீட்டில் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாதஸ்வரம் சீரியலில் அறிமுகம்

நாதஸ்வரம் சீரியலில் அறிமுகம்

சன் டிவியில் இயக்குனர் திருமுருகன் இயக்கி ஒளிபரப்பான சீரியல் தான் நாதஸ்வரம். இந்த சீரியலில் சம்பந்தம் கேரக்டரில் நடித்து பலரையும் கவர்ந்தவர் முனீஸ் ராஜா. இவருடைய பெயரை கூட பலருக்கும் இப்போது வரைக்கும் தெரியவில்லையாம். ஆனால், அவரை நாதஸ்வரம் சம்பந்தம் என்று சொன்னாலே பலருக்கு டக்கு என்று நினைவிற்கு வந்து விடுகிறது. அந்த அளவிற்கு முதல் சீரியலில் தன்னுடைய காமெடி மற்றும் கலக்கல் ஆன தனி நடை அழகை வைத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். நாதஸ்வரம் சீரியலுக்கு இவருடைய நடிப்பும் ஒரு பிளஸ் பாயிண்ட் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

அழகு தேவையில்லை திறமை போதும்

அழகு தேவையில்லை திறமை போதும்

நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' எனும் சீரியல் கதாநாயகனாக முனீஸ் ராஜா நடித்துள்ளார். அழகாக மற்றும் கம்பீரமான இருக்கும் நடிகர்கள் மட்டும்தான் கதாநாயகர்கள் என்று அல்ல, பக்கத்து வீட்டு பையன் போல எதார்த்தமாக இருப்பவர்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இந்த சீரியல் மூலமாக பலருக்கும் உணர்த்தியுள்ளார். முனீஸ் ராஜா, நடிகர் சண்முக ராஜனின் தம்பி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக தான் இருந்து வந்துள்ளது .

காதல் திருமணம்

காதல் திருமணம்

முனீஸ் ராஜா பேஸ்புக் மூலமாக ராஜ்கிரனின் மகள் ஜீனத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. முதல் முறை ஜீனத்தை பார்த்ததும் முனீஸ் ராஜாவுக்கு பிடித்து போய்விட்டதாம். இவர்கள் இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டனர் என்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருவர் வீட்டிலும் சில காரணங்களால் இவர்கள் காதலை ஏற்கவில்லையாம். ஆனால் தொடர்ந்து இரண்டு வீட்டு தரப்பிலும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி முனீஸ் ராஜாவின் வீட்டில் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ராஜ்கிரன் வீட்டில் மகளுடைய காதல் திருமணத்திற்கு ராஜ்கிரன் சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராஜ்கிரனின் மனைவியான ஜீனத்தின் அம்மா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்று முனீஸ் ராஜாவின் நண்பர்கள் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் திருமணத்தை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கோவில் ஒன்றில் வைத்து முனீஸ் ராஜா மற்றும் ஜீனத் இருவரும் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது இதை பார்த்த முனீஸின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+