இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி.. உருக்கமான பதிவு
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
தன்னுடைய திருமண நாளில் மகாலட்சுமி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாக பரவி வருகிறது.

இரண்டாவது திருமணம்
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தான் இரண்டாவது திருமணம் செய்திருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவரே பதிவிட்டிருக்கிறார். மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளரான ரவிந்தரை திருமணம் செய்து இருக்கிறார்.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமியின் இரண்டாம் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறதாம். ஏற்கனவே வி ஜே மகாலட்சுமி பலமுறை சர்ச்சைகளில் சிக்கி சமூக வலைத்தளங்களில் பலருக்கும் பிரபலமாக தான் இருந்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் இவர் நடிப்பதற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய முந்தைய வாழ்க்கையை மறந்து புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருப்பதற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திடீர் திருமணம்
வி ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது மகாலட்சுமி இரண்டாவது முறையாக திருமணம் செய்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மகாலட்சுமியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வெளிப்பட்ட அன்பு
சீரியல்களில் நெகடிவ் கேரக்டரில் பார்த்து பழகிய ரசிகர்கள் ஒரு சிலர் இவர் நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் இருப்பாரா? ? என்று கலாய்த்து வந்தாலும், அதை பற்றி இவர் எப்போதும் கண்டு கொண்டதே இல்லை. தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான பயணத்தில் இவர் நடை போட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் மகாலட்சுமி தனக்கு திருமணம் முடிந்த தருணத்தில், "என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி... உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு!! என்று ரவீந்திரனுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications